பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தொழில்துறை பற்றி

அரசோடு அவர்கள் தொடர்பு கொண்டு சில சலுகைகளைக் கேட்டுக் கொண்டது உண்டா இல்லையா? அதைத் தமிழக அரசு மறுத்து விட்டதாக முதலமைச்சரவர்கள் இங்கே சொல்லி யிருக்கிறார்கள். அது உண்மையா அல்லவா?

னாலே

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, நான் அதைத்தான் மீண்டும் சொல்கிறேன். ஏற்கனவே, அவர்கள் மட்டுமல்ல, அசோக்லேலண்ட் நிறுவனம் மட்டுமல்ல, பல தொழில் அதிபர்கள் தொழில்களைத் துவங்குவதற்காக நாடி வருகிறபொழுது, அல்லது இன்சென்டிவ்ஸ் என்ற பிரச்சினை வருகிறபொழுது மாநிலத் தொழிலமைச்சர்கள் மாநாட்டிலேயே நான் பேசினேன், இதைத்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்கள் கூட இதற்கு முன்னா பட்ஜெட்டிலே பேசும்பொழுது இங்கே சொன்னார்கள். சில மாநிலங்களில் அவர்களுடைய வசதி வாய்ப்புக்கேற்ப அவர்கள் சில உதவிகளை, சலுகைகளைச் செய்கிறார்கள். தமிழக அரசைப் பொறுத்தவரையில் நாங்கள் சில வரம்புகளை, சில சீலிங்ஸ் வைத்திருக்கிறோம். புதிதாக Interest free sales tax loan தான் இப்பொழுது மற்ற மாநிலங்களிலே கொடுக்கப்படுகிற இன்சென்டிவ்ஸைப் பொறுத்தவரையில் அதிகமாகத் தருகிற ஒரேயொரு பிரச்சினை. அதைப் பொறுத்தவரையில் 48 இலட்சம் ரூபாய் என்பதைப் புதிய நிறுவனம் துவக்குவதற்கு உச்சவரம்பாகவும், விரிவாக்கம் என்றால் 15 இலட்சம் ரூபாயாகவும் வைத்திருக்கிறோம். வேற மாநிலங்களில் ஒரு கோடி, இரண்டு கோடி, மூன்று கோடி என்று வருவதாக சொல்கிறார்கள். தமிழக அரசைப் பொறுத்தவரையில் பரவலாகத் தொழில் வளர்ச்சி வர வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். எனவே, அந்த உச்ச அளவை ஓரளவிற்கு இருக்கின்ற அந்த அளவை அதிகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறது. அதைப்பற்றி நான் பின்னாலே சொல்கிறபொழுது சொல்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : நான் தங்களிடமிருந்து ஒரு சுருக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன். தாங்கள் பதிலை வளர்த்தி எனக்கு வர வேண்டிய விடையை மறைக்கிறீர்கள். நான் அமைச்சரிடத்தில் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் அவர்கள் கேட்ட ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் எக்ஸ்பேன்ஷனுக்கு, அந்தத் திட்டத்திற்கு அவர்கள் கோரிய சலுகைகளைத் தர நீங்கள்