பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தொழில்துறை பற்றி

னே அல்லது இங்கே இருந்து எதை எதை எல்லாம் அனுப்பி இருக்கிறோமோ அதை சம்பந்தப்பட்ட அமைச்சரிடத்திலே, ஒன்றாகச் சேர்ந்து, புதிதாக வரவிருக்கிற தொழில் தமிழகத்திலேதான் வரவேண்டும் என்று அந்த அமைச்சரிடத்திலே வலியுறுத்தி, வற்புறுத்துவதற்கு உதவி செய்வார்களானால் நான் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

-

கலைஞர் மு. கருணாநிதி : நான் மாண்புமிகு அமைச்சருக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ரயில்வேயிலே கூட மதுரை மண்டலத்தோடு நெல்லை குமரி பாதையை இணைக்கவேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. பல கட்சித் தலைவர்கள் அதில் ஈடுபட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிலே ஈடுபட்டு மகஜர் தந்தார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் அதிலே உறுதியாகவும், வலிவாகவும் இல்லாத காரணத்தால்தான் அது நம்மை விட்டுப் போய்விட்டது. நாங்கள் எல்லாம் ஒத்துழைத்தாலும் கூட, ஆட்சியாளர்கள் உறுதுணையாக இருந்து அவர்களோடு வாதாடினால்தான் வெற்றி கிடைக்கும். அதனால்தான் கேட்டேன், ஏற்கனவே இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை குறித்து நாம் எழுதிய கடிதப் போக்குவரத்து என்ன என்று தெரிவிக்கப்படுமா என்று. அதற்கு பதில் சொல்லாமலேயே மாண்புமிகு திருநாவுக்கரசு, திரு நழுவல் அரசராக ஆகிவிடுவது நல்லதல்ல.

மாண்புமிகு திரு. எஸ். திருநாவுக்கரசு : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கனவே சொன்னதைப் போல மாநில அரசின் சார்பாக அந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சம்பந்தமாக என்னென்ன வகையில் கடிதங்களை நானும், முதலமைச்சர் அவர்களும் மத்திய அரசுக்கு எழுதினோம் என்பதை அவர்கள் பார்க்க விரும்பினால் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறேன். அதிலே ஒன்றும் சங்கடம் இல்லை. ரகசியம் இல்லை. இங்கிருந்து எழுதிய கடிதங்களின் காப்பி இருக்கின்றன. அதைக் காண்பிக்கத் தயக்கம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முயற்சி எடுக்காததால்தான் திருப்பதிக்கு அதுபோய் சேர்ந்து விட்டது என்று சொல்வது சரியல்ல. அதைப் போல ஆரம்பிக்கப்பட இருக்கிற மத்திய தொழிற்சாலைகள் குறித்து திட்டம் தீட்டுகிறபோது இங்கே இடம் பார்த்துச்சொல்லுங்கள் என்று