பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

உரை : 3

894.8115

TAM

61

நாள் : 03.05.1989

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, தொழில் வளர்ச்சி குறித்த இன்றைய மானியத்தில் எதிர்க் கட்சிகளினுடைய தலைவர்களும், உறுப்பினர் களும், ஆளும் கட்சியினுடைய உறுப்பினர்களும் தங்களுடைய மேலான கருத்துக்களை இங்கே எடுத்து வைத்து இருக்கின்றார்கள். முடிவு எடுப்பது என்பது குறித்து நம்முடைய எதிர்க் கட்சியினுடைய துணைத் தலைவர் நண்பர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் கூறிய அந்த வாசகத்திற்கு மாத்திரம் ஒரு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன். முதலமைச்சர் விரைவில் முடிவு எடுப்பார் என்று குறிப்பிட்டார். கூடுமான வரையில் எடுத்த முடிவுகளை நான் மாற்றுவது இல்லை என்பது அவருக்குத் தெரியும். அண்மையிலே கூட இந்த மாமன்றத்தினுடைய பொன் பொன் விழாவையொட்டி பழைய உறுப்பினர்களுக்கு, முன்னாள் பேரவைத் தலைவர்களுக்கு, துணைத் தலைவர் களுக்கு எல்லாம் மரியாதை செய்வது என்று ஒரு முடிவு எடுக்கப் பட்டபோது அவர்கள் ஒரு பதினான்கு ஆண்டுக் காலம், பதினனைந்து ஆண்டுக் காலம் இந்த அவையிலே பணியாற்றியவர்களாக இருக்க வேண்டுமென்ற வரிசையிலே ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அது வெளியிடப்படுகிற நேரத்திலே என்னுடைய அருமை நண்பர் திருநாவுக்கரசு அவர்களும், மற்றொரு அருமை நண்பர் கே.கே.எஸ்.எஸ்ஆர். அவர்களும், தங்களிடத்திலும் பேசி, என்னிடத்திலும் பேசி, செயலாளரிடத்திலும் பேசி நாங்கள் நான்கு முறை இருந்திருக்கிறோம்; எனவே எங்களையும் அந்தப் பட்டியலிலே இணைக்க வேண்டுமென்று சொன்ன போது அவர்கள் குறிப்பிட்டதைப் போல் நான் விரைந்து முடிவு எடுத்து உடனடியாக அந்தப் பட்டியலில் அவர்களுடைய பெயர்களும்