பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

97

பஞ்சை திருப்பூரிலிருந்து வெளி மாநிலத்தினர்கள்கூட வாங்கிச் செல்கிறார்கள். அது புதுக்கோட்டைக்குப் போனதாகத் தகவல், எனவே எங்கள் பகுதியில் ஒரு கூட்டுறவு நூற்பாலை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, எங்கள் மாவட்டத்தின் இரண்டு சர்க்கரை ஆலைகளும் தனியார் துறையில் இயங்குகின்றன. பெரியார் மாவட்டத்தில் அதிகப்படியான கரும்பும் விளைகிறது. எனவே அங்கே கூட்டுறவுத் துறையில் ஒரு ஆலைக்கு அனுமதி வழங்குவதாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்து, கூட்டுறவுத் துறையில் ஒரு சர்க்கரை ஆலையும் ஒரு நூற்பாலையும் துவங்க வருங்காலத்திலாவது அரசு ஆவண செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அறந்தாங்கியை விட்டுக் கொடுத்தால் அது உங்கள் தொகுதியில் வைக்கப்படும்.