பக்கம்:தொழில் வளம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தொழில் வளம்



1956ல் இந்திய சர்க்காரின் வாணிபத் தொழிலமைச்சுகள் (Ministries of Commerce and Industries) தொழில்களில் ஒரு விரிவான உற்பத்தித்திறன் முயற்சியைத் தொடங்கும் அடிப்படையை நிறுவுவதற்காக, ஜப்பானில் உள்ள உற்பத்தித்திறன் முறைகளையும் அவைகளைக் கையாளும் முறைகளையும் பார்வையிட்டு அறிந்து வருமாறு ஒரு குழுவினை அங்கு அனுப்பின. அமைப்பு முறையின் கட்டுமானம் (Organisation structure), மேலாட்சிப் பயிற்சிகள். கூட்டுப் பேரம், தொழில் துறையின் கட்டுப்பாட்டுத் தொழில் நுணுக்கங்கள், தொழிலாராய்ச்சி என்பவற்றை அந்தக் குழு அறிந்து வரவேண்டி இருந்தது. அவற்றுடன் இரும்பு எஃகு, பொறியியல், இரசாயனப் பொருள்கள், நெசவு முதலியவை தொடர்பான, மிகப் பெரிய அளவில் ஜப்பானில் நடைபெறும் தொழில்களில் தனிக் கவனம் செலுத்தி அறிவதும் அக்குழுவின் நிபந்தனைகளுள் முக்கியமானது. ஜப்பான் உற்பத்தித்திறன் மைய நிலையத்தின் அமைப்புத் திட்டம், இயங்கு முறை முதலியவற்றை அறிவதும் அந்தக் குழுவினுடைய விருப்பமாகும். மேலும் அதைப்போல ஒரு நிலையத் தினை இந்தியாவில் அமைப்பதும், அத்தகைய வேலை முறையை நிறுவத் தேவையான வழிகளைக் காணச் சிபாரிசு செய்வதும் அதன் எண்ணங்களாகும். தொழில் துறையினர், ஆராய்ச்சியாளர், அரசாங்க அலுவலர் முதலியோர் அந்தக் குழுவில் இருந்தனர். அக்குழு 1957ம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டடது. வேலை தருவோர். தொழிலாளர், அரசாங்கம் முதலியோரின் பிரதிநிதிகளும், உற்பத்தித்திறனில் ஈடுபாடு கொண்ட பிற தனிப் பகுதிகளும் சேர்ந்த தேசிய உற்பத்தித்திறன் குழுவை நிறுவுவதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/101&oldid=1382252" இலிருந்து மீள்விக்கப்பட்டது