பக்கம்:தொழில் வளம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தொழில் வளம்



திறன் குழுக்களுடன் அதற்குரிய உறவு நிலையும் உருவாயின. இந்திய சர்க்கார், அக் கருத்தரங்கு அனுப்பிய சிபாரிசுகளை எண்ணிப் பார்த்து இறுதியில் தேசிய உற்பத்தித்திறன் குழுவை நிறுவுவதென்ற முடிவை 1958ம் ஆண்டு ஜனவரியில் வெளிப்படுத்தினர். உடனே அகில இந்திய வேலை தருவோர், தொழிலாளர் அமைப்புக்களும், தொடர்புள்ள இந்திய சர்க்காரின் அமைச்சகர்களும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பினர். அவர்கள் 1958 பிப்ரவரி மாதத்தில் (NPC) எனும் தேசிய உற்பத்தித்திறன் குழுவினை நிறுவினர்.

இவ்வாறு நிறுவப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் குழுவின் தலைமைச் செயலகம் தில்லியில் இருக்கிறது. வட்டார, ஆணையாளர் (Regional Directorate) செயலகங்களைப் பம்பாய், சென்னை, கல்கத்தா, பங்களூர், கான்பூர் ஆகிய இடங்களில் நிறுவியுள்ளனர். இவ்வட்டார ஆணையாளர்களின் செயலகங்கள், ஆங்காங்கே நிறுவப்படும் உள்ளூர் உற்பத்தித்திறன் குழுக்களின் (Local Productivity Council) செயல்களை ஒருமைப் படுத்தி, அவ் வட்டாரங்களில் N.P.Cன் திட்டத்தை அமைக்கும். இவ்வாறு அமைக்கும் போது, NPCன் கிளைகளுக்கும் இதேவேலையில் ஈடுபடும் பல்வேறு நிலைய அமைப்புக்களுக்கும் உறவு நீடிக்கிறது. உற்பத்தித் திறன் முயற்சியைத் தனிப்பட்ட தொழில் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது அவர்கள் நோக்கம் மேலாட்சியினருடனும் தொழிலாளருடனும் கலந்து இயந்திரத் தொகுதி அளவில் உற்பத்தித்திறன் குழுக்கள் நிறுவப் பெறுவதைத் தூண்டுவதுமே அவர்களின் குறிக்கோளாகும். இவ்வுள்ளூர் உற்பத்தித்திறன் குழுக்கள் தமக்கே உரிய அமைப்புத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/103&oldid=1382275" இலிருந்து மீள்விக்கப்பட்டது