பக்கம்:தொழில் வளம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

மேலாட்சி (Management)



ரு நாட்டின் பொருளாதார நிலை, வாழ்க்கைத் தரம் முதலியன அந்நாட்டில் உள்ள சிறியதும் பெரியதுமாகிய ஒவ்வொரு தொழிற் சாலையின் – உற்பத்தித் திறனைப் பொறுத்துள்ளன எனக் கண்டோம். சிறிய தொழிற்சாலை ஆயின் அதில் ஓர் இருவரே எல்லா வேலைகளையும் செய்தாக வேண்டி இருக்கும். தொழிற்சாலை பெரியதோ சிறியதோ எதுவாயினும் தொழிற் சாலையில் மேலாட்சியின் செயல்கள் (functions) ஒரு வகைப்பட்டதே ஆகும். உதாரணமாக, ஒரு தொழிற் சாலையை நடத்த என்னென்ன தேவை எனக் காண்போம்; எந்தப்பொருளை உற்பத்தி செய்தால் நிலையான நெடுநாள் விற்பனை இருக்கும் எனவும் ஆராய வேண்டும். ஆராய்ந்தபின் அதற்கு வேண்டிய மூலப்பொருள்கள், அம்மூலப்பொருள்களைச் செய் முறையினால் (pro

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/109&oldid=1382304" இலிருந்து மீள்விக்கப்பட்டது