பக்கம்:தொழில் வளம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தொழில் வளம்


2. நல்ல தரம் வாய்ந்தது

3. உபயோகிக்க மிகவும் வசதியாகவும் எளிமை யாகவும் இருப்பது.

4. திறமையுடன் உபயோகத்தில் உழைப்பது (Efficient):

5. நல்ல வலுவுடன் உழைப்பது.

6. உபயோகத்தின் போது சிக்கனமாக இயங்குவது.

7. விலை குறைவாக இருப்பது.

8. தேய்மானம் ஏற்படும் போது தேய்ந்த பகுதிகள் உடனடியாய்க் கிடைப்பது.

9. வருவாய் அதன் மூலம் அதிகமாவது.

10. நஷ்டங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தவிர்ப்பது.

இவை போன்ற பல காரணங்களை மனதில் வைத்து, நுகர்வோர் பொருள்களை வாங்குகின்றனர். பொருள்களை உண்டாக்குவோர், மற்றவருடன் போட்டியிட்டுத் தம் பொருள்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் நுகர்வோரின் விருப்பங்களுக்கு ஓர் அளவு திருப்தி செய்யுமாறு அவைகள் அமைய வேண்டும். இதை நமது தினசரி வாழ்க்கையில், தினச் செய்தித் தாள்கள், சுவரொட்டிகள், திரைப்பட அரங்குகள் இன்னும் இவை போன்றவற்றால் பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்து அவர்களை வாங்கத் தூண்டும்படி செய்ய உற்பத்தியாளர்கள் செய்யும் விளம்பரங்களே நன்கு எடுத்துச் சொல்லுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/129&oldid=1382329" இலிருந்து மீள்விக்கப்பட்டது