பக்கம்:தொழில் வளம்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தொழில் வளம்


உற்பத்தி பற்றி எண்ணும் போது அதற்குரிய திட்டமும் கட்டுப்பாடும் எண்ணியே தொழிற்பட முயலவேண்டும். இம் முயற்சி இரண்டுபகுதிகளாக்ப் பிரிக்கப் படுகின்றது. முதல் பாகம் விற்பனைத் தேவைகளை உற்பத்தித் திட்டங்களாக மாற்றி அமைக்கிறது. இரண்டாவது அத்திட்டங்களை ஒவ்வொரு நிலையிலும், திட்டமிட்டபடியே விரயங்கள் அதிகமாகாமல் காத்துச் செயல்பட உதவுகிறது. இந்தக் கட்டுப்பாட்டுப் பகுதியே (Control function) ஒரு தொழிலகத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க மிகவும் உதவியாய் அமைகிறது. பெரும்பாலான நிர்வாகத்தினர், இந்தப் பகுதி ஒரு தொழிற்கூடத்தில் இருப்பது வீண் செலவே எனக் கருதுகின்றனர். முறைப்படி இப்பகுதி செயல்படுமானால் பலவகை விரயங்களைக் குறைக்கவும் திட்டப்படி காரியங்களைச் செயல்படுத்தவும் இயலும். இந்தப் பகுதியில்தான் உற்பத்தியை ஆரம்பிக்கும் முன்னமேயே மேலாட்சினருக்கு விற்பனைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வேண்டிய தொழிலாளர்கள், அவர்களின் தரம், இயந்திர வசதிகள், மற்றப் பொருள்கள் இன்ன பிற வசதிகள் எந்தெந்த அளவில் எவ்வெப் பொழுது தேவை என்பதை நன்கு கணக்கிட்டுத் தெரியப் படுத்த முடிகிறது. இந்தத் தேவைகளையும் தம் நிறுவனத்தில் உள்ள வசதிகளையும் ஒப்பிட்டு விற்பனைப் பகுதியினர் நுகர்வோருக்கு வாக்களித்த நேரத்தில் பொருள்களை உற்பத்தி செய்து அவர்களைத் திருப்தி செய்யமுடியுமா அல்லது முடியாதா எனத் திட்டவட்டமாக அறிய முடிகிறது. ஒப்பிட்டதன் பலனாக உடன்டியாகப் பற்றாக்குறைகளை ஈடுபடுத்தித் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற வழி அமைக்க முடிகிறது:அன்றி இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/133&oldid=1388115" இலிருந்து மீள்விக்கப்பட்டது