பக்கம்:தொழில் வளம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி(Management)

141


இதை Job evaluation என ஆங்கிலத்தில் கூறுவர், இவ்வாறு தரம் பிரிக்கப் பலவித அடிப்படைகளைக் (factors) கணக்கிலெடுத்துக் கொண்டு. ஒவ்வொரு வேலைக்கும் இந்த ஒவ்வொரு அடிப்படையையும் (factor) எந்த அளவு வேண்டும் என நிதானித்துப் பின் அந்த வேலையின் மதிப்பைக் கணக்கிட்டு அதனுடைய தரத்தை நிர்ணயிக்க,வேண்டும். சுருக்கமாக, கல்வி அறிவு, அனுபவம், உடல் வலிவு, வேலை செய்யப்படும் இடத்தின் நிலைமை, வசதி முதலியன இந்த அடிப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படும். தனி ஒருவரே இவ்வேலையைச் செய்வதில்லை. பொதுவாக மேலாட்சியினரால் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அக் குழுவே இதை நிர்ணயிக்கிறது. அக்குழுவில் ஐந்து பேர் அளவில் இருப்பார்கள். இதில் செயலாளராகப் பணியாளர் பற்றிய பகுதி அலுவலரும் (Personnel officer) அத்தொழிலை மேற்பார்வை இடுபவர், பொறியியல் கலை கற்ற ஒருவர், தொழிலாளர் சங்கப் பிரதிநிதி, மேலாட்சியினர் சார்பில் ஒருவர், போன்றவர்கள் பங்கு கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு வேலையையும் மதிப்பிட்டுப் பின் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவிற்கு வருவார்கள். அவ்வாறு முடிவுக்கு வந்த பின் அந்தத் தொழிற் கூடம், தொழிற் கூடம் அமைந்துள்ள இடம், மற்றும் இதர சூழ்நிலைகள் இவைகளைப் பொறுத்து இவர்கள் முடிவு செய்த வேலைகளுக்கு ஈடான விலையைக் கணக்கிட்டு அதிக விலை மதிப்புள்ள வேலையை மேலும் அதற்குக் கீழ் அதற்கடுத்த விலை மதிப்புள்ளதும் இப்படிப் பலப்பல மதிப்புள்ள வேலைகளை ஒரு பட்டியலாகத் தயாரிப்பார்கள். இந்த வேலைப் பட்டியல் தயாரானதும் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளிகளின் கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/144&oldid=1381945" இலிருந்து மீள்விக்கப்பட்டது