பக்கம்:தொழில் வளம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

145


செய்யும் தொழிற்கூடம், வேலை செய்யும் நேரம், நடைமுறையில் இருக்கும் விதிகள், அங்கு வேலை செய்வதால் உண்டாகும் மன நிறைவு, போன்றவைகள் எல்லாவற்றையும் தனக்குப் பிடித்தவாறு அமைந்துள்ளனவா என அறிந்தே அந்த வேலையில் தொடர்ந்து இருக்க விரும்புகிறான். இவை எல்லாவற்றையும்விட அவன் பெரிதும் விரும்புவது, தன்னை வெறும் ஊதியத்திற்காக உழைக்கும் உழைப்பாளி என்று மட்டும் மற்றவர் கருதாமல், தொழிற்கூடத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பலவிதங்களில் பங்கு கொள்ளும் பலருள் தானும் ஒருவன் எனக் கருத வேண்டும் எனபதேதான் இதன் பின்னரே அவன் வாழ்க்கைத் தரத்திற்கு முக்கியமாய் வேண்டிய பணத்தை நாடுகிறான். மற்றவை ஏதும் இல்லாமல் எவனும் பணம் கிட்டுவதால், நீடித்து நின்று நிலையாக இருக்கவே மாட்டான். அவன் நீடித்திருக்கிறான் என்றால் கூடுமானவரை மேற் சொன்னவைகளில் அவன் முழுதும் இல்லாவிடினும் ஓரளவேனும் நிறைவு காணுகிறான் என்றே கருத வேண்டும். அப்போதுதான் பணத்தைப் பற்றி முழு அளவில் நினைக்க அவனுக்கு இடமுண்டு.

வேறு ஓர் இடத்தில், சிறு தொழிற்சாலைகளில் ஓரிருவர் உள்ள இடத்தில் வேலை நடப்பதுபோல, பல, பேர்கள் வேலை செய்யும் தொழிற்கூடத்தில் வேலை நடப்பதில்லை எனக் கண்டோம். இதற்குக் காரணம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள இடைவெளி, உறவு முறை என்றும் கண்டோம். அவ்வாறு நல்ல முறையில் தொழில் நடக்க வேண்டுமாயின் ஒவ்வொரு தொழிலாளியும் தாங்கள் வேலை செய்யும் தொழிற் கூடம் மற்றவர்களுடையது என்று எண்ணாமல், அது

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/148&oldid=1400219" இலிருந்து மீள்விக்கப்பட்டது