பக்கம்:தொழில் வளம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

147


நாட்டினர் மனோதத்துவ வழியில் பல ஆராய்ச்சிகளைச் செய்து இதை ஊர்ஜிதம் செய்துள்ளனர். மேலாட்சியினர் எந்த அடிப்படையில் ஊதியம் கொடுக்கிறார்களோ அந்த அடிப்படைப் பலன் வெகுநாள் கிட்டுவதில்லை. இது மனிதர்களாகிய நம் எல்லோரிடத்தும் உள்ள குறைபாடு, இதனால், பழையமாதிரி ஊக்கம் குன்றி, தொழிற்கூடத்திற்கு இயந்திரம் போன்று மணிக்கணக்குக்காகச் சென்று ஓர் அளவு செய்ய வேண்டிய வேலையைச் செய்து (இந்த அளவு வேலை அதிக ஊதியம் பெற ஆரம்பித்த புதியதில் முழு ஊக்கத்துடன் செய்த வேலையைவிட மிகக் குறைவானது). திரும்புகின்றனர். மாதச் சம்பளம் வாங்கும் அநேகமான தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் நடக்கும் சர்வ சாதாரண காட்சி இது. ஊதிய உயர்வு கிடைக்கும் மாதத்திற்கு முன்னும் பின்னும் அனைவரும் மிக ஆர்வத்துடன் வேலை செய்வதும், அதற்குப் பின் நாட்கள் ஆக ஆக இந்த ஆர்வம் குன்றிக் குறைவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

இப்படியாக இந்த ஆர்வம் குன்றாமல் இருக்கவும் மேலாட்சியில், உள்ளவர்களுக்குக் கொடுக்க மனம் வருவதில்லை என்ற குறைகூவல்களைக் குறைப்பதற்காகவுமே முன்னோர் இடத்தில் கூறிய போனஸ் முறையையும், உருப்படி வீத மதிப்பு முறையையும் கடைப் பிடிக்கின்றனர். இதனால் என்ன பயன் எனக் கீழே காண்போம். போனஸ் முறையில் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது தினம் 8 மணி நேர உழைப்பில் இத்தனை அளவு வேலைகள் செய்ய வேண்டும் என்று இருந்தால் மாதச் சம்பளம் இவவளவு என்று வாங்கிக் கொள்கிறார்கள். அதற்குமேல் ஊதியம் வேண்டுமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/150&oldid=1382266" இலிருந்து மீள்விக்கப்பட்டது