பக்கம்:தொழில் வளம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

149


அடைய வேண்டியதுதான். பொதுவாகப் பார்க்கும் போது எந்தத் தொழிலாளியும் அடிப்படைச் சம்பளத்தோடு திருப்தி அடைவதில்லை. எந்த வகையிலும் தன்னுடைய நேரத்தை வீணாக்காமல் கூடுமானவரை அதிகம் செய்து அதிகப் பணம் பெற்றுத் தன்னுடைய தன் குடும்பத்தினுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவே முயல்கிறான். இதைப் பெரும்பாலான தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள். அவர்களின் மனத்தில் உண்டாகும் ஊக்கம் என்றும் குன்றாமல் இருக்க இது சிறந்த முறையாக அமைகிறது.

ஆனால், சில இடங்களில் சிறு மனப்பான்மை கொண்ட ஒரு சில மேலாட்சியினர் இந்தத் திட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகவும் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவும் உபயோகிக்கின்றனர். அதே சமயம் பொறுப்பும், நேர்மையும் அற்ற சில தொழிலாளிகள் அதிகக் கஷ்டப்படாமலேயே கொடுக்கும் அடிப்படைச் சம்பளத்துக்குக் கூடிய மட்டும் குறைவான வேலையை மேலாட்சியினர் நிர்ணயிக்கட்டும் என எண்ணி,வேண்டுமென்றே குறைத்துச் செய்து பின் தங்களுக்குச் சாதகமாகச் சிரமம் அற்ற அளவில் வேலை செய்து நிறையப் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகின்றனர். நல்ல மேலாட்சியாய் இருந்தால், இவ்விரண்டு நிலைகளையும் தவிர்த்து நல்ல உறவு முறையில், முறையான அளவில் செய்ய வேண்டிய வேலை, அவ் வேலைக்குத்தகுந்த ஊதியம் அமைக்க வகை செய்வர். இவ்வகையில் பணியாளர் பகுதிக்கு உகந்தவகையில் உதவி செய்யத் தொழில் ஆராய்ச்சிப் (Work study) பகுதி பெரிதும் உதவி செய்ய இடமுண்டு.

மேற்கூறிய இவைமட்டும் இன்றி நல்லுறவை வளர்க்கச் செய்ய வேண்டியவைகள், தொழிலாளர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/152&oldid=1382281" இலிருந்து மீள்விக்கப்பட்டது