பக்கம்:தொழில் வளம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

157


வரும். சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் எதிர்பாராத அளவுக்குச் சில பெருந்தொழில் சிறு தொழில்கள் இடம் பெற்று நாட்டுத் தொழில் வளத்தைச் சிறக்க வைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகிறது.

தொழில் வளர்ச்சிக்குரிய மூலப்பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லத்தக்க போக்கு வரவு வசதிகள் ஓரளவு உள்ளன என்றாலும், அவை தொழில் வளர்ச்சியின் அடிப்படையை நிறைவேற்றும் அந்தப் பெருமளவில் வளரவில்லை. மற்றும் அதனால் மூலப் பொருள்களின் விலையும் (போக்குவரத்துச் செலவினால்) அதிகரிக்க உற்பத்திப் பொருள்களின் விலையையும் உடன் கூட்ட வேண்டியுள்ளது. இன்றைய உலகச் சந்தையில் உள்ள போட்டி மனப்பான்மையில் நல்ல உழைக்கத்தக்க பொருள்களைக் குறைந்த விலைக்குக் கொடுத்தால் தான் வாணிபம் பெருகி அதன்வழி நாட்டின் கைத்தொழிலும் நலம் பெற்றோங்கும். எனவே மூலப் பொருள்கள் கிடைக்கும் அந்தந்த இடங்களுக்கருகே அவ்வவற்றின் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்ற தொழில்களைத் தொடங்குதல் நலம் பயப்பதாகும். இந்த நிலையில் நெய்வேலியின் நிலக்கரியைத் தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ளது. அதுவும் பயன்தரத் தொடங்கி யுள்ளது என அறிகின்றோம்.

தமிழ் நாட்டில் தொழில் வளர்ச்சிக்குரிய மூலப் பொருள்கள் அதிகம் இல்லை. என்றாலும் ஓரளவு நாம் இன்றும் வளர்ச்சியடையக் கூடிய பொருள்கள் இல்லை என்றும் சொல்ல முடியாது. தமிழ் நாட்டுக் காட்டு வளம் விரிந்த அளவில் இல்லை. ஒருவருக்கு 16 ஏக்கர் வீதமே தமிழ் நாட்டில் காடுகள் உள்ளன. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/160&oldid=1382031" இலிருந்து மீள்விக்கப்பட்டது