பக்கம்:தொழில் வளம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தொழில் வளம்


உண்மையிலேயே சென்னை, பெருந்துறைமுகமாக அமையாதிருந்தால் தமிழ்நாடு தொழில் வாணிபத் துறையில் இத்தனை தூரம் வளர்ச்சி பெற்றிருக்குமா என்பது ஐயத்துக்கு இடமாகவே இருக்கும். தமிழ்நாடு பண்டைக் காலத்தில் பாரதி காட்டியபடி,

‘சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவு பலவினும் சென்றேறி—அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு’

எனற பழம்பெருமை கொண்ட ஒன்றாக இருந்தாலும் சென்னைத் துறைமுகம் உருவாகாதிருந்தால், தமிழ் நாடு தொழில் துறையிலும், வாணிபத்திலும் பின் தங்கிய நாடாகவே இருந்திருக்கும். அதற்கென நாம் ஆங்கிலேயர்களைப் போற்றத்தான் வேண்டும். இன்று இச்சென்னைத் துறைமுகம் பல வகையில் வளர்ச்சியடைந்து வருகின்றது என்றாலும் இன்றைய தேவையை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே இது தொழில் படுகின்றது. எனவேதான் தமிழ்நாட்டு அரசாங்கம் நாட்டின் தென்கோடியிலுள்ள தூத்துக் குடியை ஆழ்கடல் துறைமுகமாக்க வேண்டுமென்று மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த இடத்தின் சரித்திரச் சிறப்பை அறிந்தவர்கள் தமிழ்நாட்டு விழைவு இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பதைக் கண்டு உண்மையிலேயே வருந்துவர். ஆங்கிலேயருடன் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டுத் தனிப்பெருந்தலைவரான வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அங்கே தான் தனியாகக் கப்பல் வாங்கி ஆங்கிலேயருக்கு எதிராகச் செலுத்தி அவர்களை நடுங்கச் செய்தார். அதனால் அவர் பெற்ற இன்னல்கள் பல. ஆனால் இன்றும் அவர் விரும்பிய அர-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/173&oldid=1382205" இலிருந்து மீள்விக்கப்பட்டது