பக்கம்:தொழில் வளம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்குரிய அடிப்படைகள்

171


சியல் சுதந்திரம் வந்து விட்டது. தூத்துக்குடி ஆழ் கடல் துறைமுகமானால் மறைந்த அவர் மனம் அமைதியுறுவதோடு, உண்மையாக நாட்டுத் தொண்டர்களுக்கு நன்றி காட்டிய மனநிறைவும் அதன் வழி நாட்டுத் தேவையை நிறைவேற்றிய செம்மை உணர்வும் நாமும் பெற்றவராவோம். மூன்றாம் திட்டத்தில் இது நிறைவேற்றப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இத்துடன் இணைந்த சேதுசமுத்திரத்திட்டமும் உடன் நிறைவேற்றப்பட்டால்தான் அதன் இன்றியமையாமையை விளக்கும். இலங்கையைச் சுற்றி வரும் கப்பல்களெல்லாம் இவற்றால் அத்தொல்லை நீங்கி நேராகவே செல்லலாம்.

இந்த இரு துறைமுகங்களுக்கிடையில் எத்தனையோ சிறு சிறு துறைமுகங்கள் உள்ளன. புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டணம் போன்ற சிறு சிறு துறைமுகங்கள், தத்தம்மாலியன்ற அளவு நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப் பணிகளைச் செய்கின்றன. நெய்வேலியின் தொழில் வளர்ச்சியில் கடலூருக்கு ஒரு நிலைத்த இடத்தை உண்டாக்க வாய்ப்பு உண்டு. கடலூருக்கும் நெய்வேலிக்கும் இடையில் உள்ள தூரம் மிகக் குறைவே. இரண்டுக்கும் இடையில் சிறு சிறு கப்பல்கள் செல்லும் வகையில் பெருவாய்க்கால் தோண்ட அதை நிலைபெற்ற நீர் ஓட்ட நிலையமாகச் செய்வார்களானால் பல்வேறு தொழில் சாலைகளுக்கு வேண்டிய இறக்குமதிப்பொருள்களும் முடிந்த ஏற்றுமதிப் பொருள்களும் தங்கு தடையின்றிச் செல்ல வாய்ப்பு உண்டாகும். அதற்குப் பெருந்தொகை செலவாகும் என்பது உண்மைதான். 10,000 கோடி திட்டங்களைத் தீட்டும் நம்முடைய நாட்டுக்கு அது ஒன்றும் உண்மையில் பெருந்தொகை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/174&oldid=1382222" இலிருந்து மீள்விக்கப்பட்டது