பக்கம்:தொழில் வளம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தொழில் வளம்


றளவும் சிறந்த பாசன வசதி அளிக்கும் ஏரிகளாக விளங்குவதைக் காண்கின்றாேம். கரிகாற் பெருவளத் தானே வரலாற்று எல்லையில் காவிரிக்குக் கரை கட்டிய மன்னனாகக் காணப் பெறுகின்றான். அவன் காவிரிக்குக் கரை அமைக்குங்கால் இந்திய நாட்டின் பிற பகுதியிலிருந்தும், இலங்கையிலிருந்தும் அவனது ஆணையின்கீழ் பலர் வந்து பணியாற்றினர் என வரலாறு காட்டுகின்றது. பிற்காலச் சோழர் காலத்தில் கட்டிய பல ஏரிகளும், வாய்க்கால்களும் அவர் தம் விருதுப் பெயர்களை நமக்கு நினைவூட்டிக்கொண்டு இன்றும் வாழ்கின்றனவே. அவற்றைப்பற்றியெல்லாம் விளக்கிக்கொண்டே செல்லின் எல்லையற்று விரியும்.

உழவுத் தொழிலுக்குரிய பாசனவசதிகள் மட்டுமின்றி நில அளவை முதலியவற்றையும் செப்பம் செய்த பெருமை பிற்காலச் சோழர்களுக்கே உண்டு. அவர்கள் அளந்த முறைபற்றியும் அவர்கள் பயன் படுத்திய அளவுகோல்கள் பற்றியும் கல்வெட்டுகள் நன்கு விளக்குகின்றன. ‘நிலமளந்தான்’ என்றே அளந்து சிறப்புப் பெயர்பெற்ற பெருவேந்தர் தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் வாழ்ந்துள்ளார்கள்.

இனிக் கிராமங்களை வளர்த்த பெருமையும் அவர்களையே சாரும். இன்று நாடெங்கும் வளர்ந்து வரும் பஞ்சாயத்து ஆட்சிமுறை சோழர்களுடையதே. ஊர் தோறும் பஞ்சாயத்துச் சபைகளை அமைத்து அச்சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தினை வரையறுத்து, உறுப்பினராகத் தகுதியுள்ளார் யார் யார் எனக்காட்டி குடவோலை முறையில் தேர்வு நடத்திய வரலாறெல்லாம் நல்ல வேளை பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகாது கல்வெட்டுக்களால் சாகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/179&oldid=1400221" இலிருந்து மீள்விக்கப்பட்டது