பக்கம்:தொழில் வளம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தொழில் வளம்


உள்ள அடிப்படையைக் கவனிக்காது மேலே எவ்வளவு அழகு செலுத்தினாலும் பயன் விளையாதே! அப்படியே தான் தமிழ் நாட்டின் – பரந்த பாரதத்தின் அடிப்படையாகிய கிராமங்களுக்கும் அவற்றின் தொழிலாகிய உழவுக்கும் முதலிடம் தந்து திட்டங்கள் தீட்டப் பெறல். வேண்டும். வரவரப் பல்வேறு திட்டங்கள் கிராமங்களுக்கு ஏற்றவகையில் அமைகின்றன எனக் காண்கின்றாேம். சமுதாய நலத்திட்டமும் தேசிய வளர்ச்சித்திட்டமும் இவைபோன்ற பிறவும் இன்றைய பஞ்சாயத்து ஆட்சி அமைப்பும் ஓரளவு கிராம வளத்துக்கும் உழவுத் தொழில் கலத்துக்கும் உதவுகின்றன என்றாலும் நகரங்களும் அவற்றின் துழல்களும் பயன் பெறுகின்ற அளவுக்குக் கிராமங்கள் பயன் பெறுவதில்லை. அதனாலேயே இன்னும் ஆசிரியர்களும், மருத்துவர்களும், சமூக கலத்தொண்டர்களும் பிற அரசாங்க அலுவலர்களும் கிராமங்களுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். பழங்கால இலக்கியங்களில் ‘பதியெழு வறியாப் பழங்குடி’ என்ற ஒரு தொடர் பல இடங்களில் வருவதைக் காண்கின்றாேம். அதன் பொருளை உணர்ந்து கொண்டால்,ஊர்கள் தம் நிறைவு பெற்றிருந்த தன்மையை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஓர் ஊரில் உள்ள மக்கள் தமக்குத் தம் ஊரில் ‘இவை இல்லையே’ என்று எண்ணி ஏங்கி ஊரை விட்டுச் செல்லுவது கிடையாதாம். அவர்கள் அக்கிராமங்களில் வாழ்வின் தேவைகள் அத்தனையும் பெற்று நெடுங்காலம் வேற்றூர் புகுந்து வாழ வேண்டாது தம்பதியை விட்டு எழாத பழங்குடிகளாக வாழ்ந்தார்கள் எனக் காண்கிறோம். இந்த அடிப்படை சரியானதா அல்லவர் என்ற ஆராய்ச்சி இங்கே நமக்கு வேண்டாம். ஆனால் அந்தச் சமூக அடிப்படை – ஒவ்வொரு கிராம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/181&oldid=1382144" இலிருந்து மீள்விக்கப்பட்டது