பக்கம்:தொழில் வளம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

185



சாரப் பெருக்கத்தினால் நாட்டில் எண்ணற்ற கிணறுகளிலிருந்து நீர் இறைத்துப் பாசனங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஏரிகளும் அவற்றின் கால்வாய்களும் செப்பம் செய்யப் பெறுகின்றன. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் 12.34 கோடி ரூபாய் செலவு செய்து எழு பெருந் திட்டங்கள் தீட்டி ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ஏக்கருக்குப் பாசனவசதி உண்டாயிற்று எனக் கணக்கிட்டுள்ளனர். இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் பதினோறு திட்டங்கள், முடிவுற்று அவற்றால் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைத்த தென்பர். மூன்றாவது திட்ட ஏற்பாட்டால் இன்னும் இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப்பு இருக்கிறது போலும்! இவ்வாறு தமிழ் நாட்டு ஆறுகளை யெல்லாம் அணைகள் கட்டிப் பாசனத்துக்குப் பயன்படுத்தி, உதவி செய்துள்ளார்கள். மேலும் தேவையான பாசனத்துக்கு அண்டை அங்க நாடுகளை நாட வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக நாடியும் பயன் கிட்டவில்லை. குடி தண்ணீரும் கொடுக்க , மறுக்கின்ற அளவில் அண்டை நாடுகள் மறுத்து, பலகோடி மதிப்புள்ள நீரைக்கடலில் கொண்டு சேர்க்கின்றன. இந்தியர் ஒன்றிய நாடு என்று உணர்த்தியும் பேசியும் வரும் தலைவர்களும் இந்திய அரசாங்மும் இவற்றைக் கவனியாதிருந்தால் நாட்டில் வேறுபாடு வளருமென்பது திண்ணம். வீணாகப் போகும் ஆற்று நீரை வேண்டிய உழவுக்கும் குடிப்பதற்கும் கூடப் பயன் படுத்த முடியாத நிலையில் நாட்டு ஒற்றுமை வெறும் கேலிக் கூத்தாகவே முடியும். எனவே இந்திய அரசாங்கத்தார் தமிழ் நாட்டு அரசாங்க வேண்டுகோளை உடனடியாகக் கவனித்துத் தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/188&oldid=1382203" இலிருந்து மீள்விக்கப்பட்டது