பக்கம்:தொழில் வளம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தொழில் வளம்



வரும் வேறுசில தொழில்களில் ஈடுபடலாம். அவற்றால் அவர்களும் நன்மை பெற்று நாடும் நலமடையும். உதாரணமாகக் கோழிப் பண்ணை அமைத்தல்-தேனீ வளர்த்தல்-புறா முதலியவைகளை வளர்த்தல் ஆகியவற்றைக் கொள்ளலாம். வீட்டில் உள்ள பெண்கள் நூல் வேலைகள், தத்தம் ஊரில் கிடைக்கும் ஓலை இலை முதலியவைகளைக் கொண்டு அழகிய பயன்படு பொருள்களைச் செய்தல், நூல் நூற்றல் முதலியவற்றில் தம்மை ஈடுபடுத்தலாம். வாய்ப்புள்ளவர்கள் இன்னும் பல்வேறு வேலைகளை மேற்கொண்டு நல்ல பயனை அடையலாம். அவ்வாறு கிராமத்தில் உள்ளார் அனைவரும். ஓய்வு வேளைகளைப் பயன்படுத்திப் பல்வேறு பொருள்களைச் செய்வார்களாயின், அவற்றை வெளியூர்களில் விற்கத்தக்க வகையினை அரசாங்கமே ஏற்பாடு செய்துதரும் என்பது உறுதி. ஊர்தொறும் கூட்டுறவு வகையில் பல. குடிசைத் தொழில்கள் தொழிற்படுகின்றன என அரசாங்கம் கூறுகின்றது. (அதன் விவரம் மற்றோரிடத்தில் இடம் பெற்றுள்ளது) எனவே ஓய்வு நேரத்தைத் தமக்கும் நாட்டுக்கும் பயன்படும் வழியில் செலவுசெய்து உழவுத் தொழிலுடன் இவற்றால் வரும் வளத்தாலும் தங்கள் வாழ்வை வளம்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. ஜப்பான் போன்ற நாடுகளில் பெண்கள் ஓய்வுநேரங்களில் எத்தனையோ வகையான வேலைகளைச் செய்து எண்ணற்ற பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்களென அறிகிறோம். ஏன் நாமும் அவ்வாறு செய்து வளம்பெறலாகாது?

இவைகளைத் தவிர மற்றொன்றும் முக்கியம். உழவுத் தொழிலுக்குப் பசும் உரம் இன்றியமையாதது எனக் கண்டோம். அதற்கேற்ற மரஞ்செடிகள் நாடு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/199&oldid=1382250" இலிருந்து மீள்விக்கப்பட்டது