பக்கம்:தொழில் வளம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

205


இடம் பெறவில்லையானால் இந்நூல் நிறைவு பெற்ற தாகாது.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையிலும் பிற உறுப்பு நாடுகளைக் காட்டிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதை யாவரும் அறிவர். இந்தக் கைத்தறித் துறையில் அக்கூட்டுறவு பெரும் பங்கு கொண்டுள்ளது. தமிழ் நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஒரு பெரிய நிலையமாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. இந்தக் கூட்டுறவுச் சங்கம் 1935ல் ஆரம்பிக்கப் பெற்றது. நாட்டிலுள்ள அடிப்படைச் சங்கங்கள் பலவற்றையும் இணைத்து இச்சங்கம் பல இலட்சம் மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கென வாழ்ந்த ஏழைமக்கள் வீடுகளை அழகுபடுத்தி இத்தொழிலை நன்கு திறம்பட நடத்தி, இதை வாணிபத் துறையில் வளம்படுத்தி பல்வேறு வகையில் செழிக்கச் செய்து, நெசவாளியையும் உலகில் வாழும் பிறமக்களுக்குச் சமமாகத் தலை நிமிர்ந்து வாழவைக்க வேண்டுமெனவே இச்சங்கம் தொழிலாற்றுகின்றது. எனவே நூல் முதலிய எல்லா மூலப்பொருள்களையும் நெய்தற் கருவிகளையும் இச்சங்கம் நேரடியாகவும் அரசாங்கத்தின் மூலமும் குறைந்த விலைக்கு மொத்தமாகப் பெற்றுத் தன் கீழ் உள்ள எல்லாக் கிளைச் சங்கங்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றது. அப்படியே எல்லா அடிப்படைச் சங்கங்களும் கிளைச் சங்கங்களும் உண்டாக்கும் பலவகையான துணிகளைத் தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பாகங்களிலும் வெளிநாடுகளிலும் விற்கத் தக்க ஏற்பாடுகளையும் செய்து தருகின்றது.

இப்பெருஞ்சங்கம் அரசாங்கத்தினிடத்தும் ‘ரிசர்வ் பாங்கி’யினிடத்துமிருந்து பெரும் பெருந்தொகைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/208&oldid=1400504" இலிருந்து மீள்விக்கப்பட்டது