பக்கம்:தொழில் வளம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

207


இதைத் தவிர துணிகளுக்குப் பூ போடல், வண்ண்ம் இடல், நூல்களுக்கு வண்ணம் இடல் ஆகிய பல துறைகளில் இச்சங்கம் ஆவன செய்து கைத்தறி நெசவை எத்துணைக்கு வளர்க்க முடியுமோ அத்துணை அளவிற்கு வளர்த்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு பல இலட்சம் ஏழைமக்களின் வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது. இன்றும் சில நெசவாளிகள் இச்சங்கத்துடன் இணையாது இருப்பார்களெனினும், எல்லா விதமான வசதிகளையும் பயன்களையும் கருதிப் பெரும்பாலான நெசவாளிகளை இதன் அடிப்படைச் சங்கங்களில் உறுப்பினராகி இத் தொழிலை ஒரு கூட்டுப் பெருந்தொழிலாகவே நடத்தி வருகின்றார்கள். இத்துறைக்கு வேண்டிய நூல் அல்லது ஆடை தூய்மைப்படுத்தும் சாதனங்களையும் அதற்கு வேண்டிய பொருள்களையும், பூ பொறிக்கும் இயந்திரம் முதலியவற்றையும் தேவையானவர்களுக்குத் தந்து உதவும் வகையில் பல ஏற்பாடுகளை இச்சங்கம் செய்து வருகின்றது. அதற்கென ஏற்றுமதி இறக்குமதி உத்தரவுகளைத் தமிழ் நாட்டு, மத்திய அரசாங்கங்களிடமிருந்து பெற்று எல்லோருக்கும் பயன்படும் வகையில் இது உதவி செய்கின்றது. தனியார் இயல்பாகப் பெறமுடியாத பல இத்தொழிற்குத் தேவையான உதவிகளை இது கூட்டாகப் பெற்றுத் தன் பிரிவுகள் மூலமும் அடிப்படைச் சங்கங்கள் மூலமும் எல்லோருக்கும் கொடுத்து உதவுகின்றது.

நூல்கள் மட்டுமன்றிச் செயற்கைப்பட்டு, பட்டு, ஆகியவற்றினும் இச்சங்கம் தொழிற்படுகின்றது. அதற்கு வேண்டிய செயற்கைப் பட்டினை இறக்குமதி செய்யவேண்டிய ‘பர்மிட்’ஐ இது அரசாங்கத்திடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/210&oldid=1400506" இலிருந்து மீள்விக்கப்பட்டது