பக்கம்:தொழில் வளம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தொழில் வளம்


தலைவர்களும் அவர்தம் முயற்சிகளுக்குச் செவி சாய்த்து, உதவிய அரசாங்கங்களும் கைதூக்கித் தந்த நல் உதவியினாலேயே இன்று கைத்தறி வாழ்கின்றது. இன்றும் கைத்தறித் தொழில் நிலையாக வளரும் என்ற நிலை நாட்டில் அமையவில்லை என்பர். நெசவு ஆலைகள் தமிழ்நாட்டில் அதிகமாக இல்லையேனும் வடநாட்டுப் பல பகுதிகளில், சிறப்பாக, குஜராத் மராட்டியப் பகுதிகளில் உள்ளன. அவற்றொடு போட்டியிட முடியாத நிலையில் ஓரளவு முயன்று கைத்தறித் தொழில் மெல்ல நகர்ந்துகொண்டே இருக்கிறது.

இன்றைய நாட்டுத் தேவையான ஆடைவகையில், நான்கில் ஒரு பகுதியைக் கைத்தறியே நிறைவு செய்கின்றது. இந்தியா முழுவதும் ஒன்றரை கோடி மக்கள் இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களாலும் இத்துறை ஓரளவு வளர்ச்சி. பெற்று வந்துள்ளது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கைத்த்றிக்கு இந்திய அரசாங்கம் 36½ கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது எனக்கணக்கிடுவர்.

கைத்தறி வளர்ப்பதாக அனைந்திந்தியாவுக்கு ஒரு கைத்தறி போா்டினை (All India Handloom Board) அரசாங்கத்தார் நிறுவினர். மற்றும் ஆலைகள் உண்டாக்கும். ஒவ்வொரு சதுர கெஜத் துணிக்கும் 1.625 காசு ‘செஸ்’ வசூல் செய்து அதில் பெரும்பகுதியைக் கைத்தறியின் வளர்ச்சிக்குப் பயன் படுத்தினர். அனைத்திந்திய அளவில் அரசாங்க நேரடி உதவியாலும் ‘செஸ்’ உதவியாலும் கடந்த பத்தாண்டுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/213&oldid=1400508" இலிருந்து மீள்விக்கப்பட்டது