பக்கம்:தொழில் வளம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல் தொழில்-கைத்தறி

221




இவ்வாறு தமிழ்நாட்டு நிதிமந்திரியாக இருந்த திரு சி. சுப்பிரமணியம் அவர்கள் சுருக்கமாகக் கைத்தறி பற்றியும் அதை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து அனைவரும் ஒன்றிக் கலந்து நல்லமுடிவுக்கு, வர வாய்ப்பு இருக்கிறது. எத்தனை வேறுபாடுகள் உண்டானபோதிலும் நாட்டில்.சிறப்பாகத் தமிழ்நாட்டில் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்து வளர்ச்சி அடைந்த இக்கைத்தறி நெசவுத் தொழில் இனியும்மங்காது.வளரும் என்ற நம்பிக்கைக்கு இடமிருக்கிறது. என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் பருத்தி நூல் கைத்தறிகளே பெரும்பாலும் உள்ளன. அத்துடன் பட்டு.ஆடைகளும் ஒரு சில இடங்களில், நெய்யப் பெறுகின்றன. காஞ்சி புரத்தில் நெய்யப்பெறும் பட்டு அனைத்திந்தியப் புகழ் மட்டுமின்றி. உலகப் புகழையே பெற்றுள்ளது.காஞ்சியில்,இப்பட்டுப்புடவைக் கைத்தறிக்கும்.ஒரு கூட்டுறவுத் தாபனமும் உள்ளது. .தனியார் பலரும் இத்தொழிலை வளர்த்து வருகின்றனர். இதன் மூலப் பொருள்களாகிய, பட்டும், சரிகையும் தமிழ்நாட்டுக்கு வெளியிலே இருந்து வருகின்றன. என்றாலும் இத் தொழில் இங்கு நன்கு வளர்ச்சியடைகின்றது. எனவே கைத்தறி என்னும்போது பருத்தி நூலுடன் பட்டு நூலும்சேர்த்தே எண்ணப் பெறல்வேண்டும். இரண்டும் தமிழ்நாட்டுப் பழந்தொழில்களேயாகும். மூன்றாவதாகக் குறிக்கப் பெறுகின்ற கம்பள நெசவு, தமிழ்நாட்டில் கம்பளத்துக்கு வேண்டிய மூலப்பொருள்கள்இல்லை. மற்றும் அதை நெய்யவேண்டி முயற்சியும் நாட்டில் இல்லை. (ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/224&oldid=1400674" இலிருந்து மீள்விக்கப்பட்டது