பக்கம்:தொழில் வளம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. மின்சாரமும் தொழில்வளமும்



மின்சாரத்தை உண்டாக்கி அதை உலகுக்கு அளித்தவன் யாவனாயினும் அவன் எந்த நாட்டைச் சார்ந்தவனாயினும் இன்றைய உலகம் அவனுக்குத் தலை தாழ்ந்து அஞ்சலி செய்யக் கடமைப் பட்டுள்ளது. மக்கட் சமுதாய வாழ்வும் தனிவாழ்வும் அவற்றை வளமாக்கும் உழவுத் தொழில் ஆலைத் தொழில் போன்ற பிறதொழில் அமைப்புக்களும் மின்சார்மின்றேல் இல்லை என்னும் அளவுக்கு வாழ்க்கை சென்று கொண்டே இருக்கிறது. இன்று மின்சாரம் புகாத இடமே இல்லை என்னும் அளவுக்கு அதன் வளர்ச்சி பெருகியுள்ளது. உலகெங்கணும் மின்சாரம் தன் ஆணை செலுத்துகிறது. அண்மையில் மின் ஆற்றலுக்கு மேலான சில ஆற்றல்களைக் கண்டுபிடித்து அவற்றை வாழ்வுக்குப் பயன்படும் ஆக்கத் துறைக்கு உபயோகிக்கத்தொடங்கும் முயற்சிகள் நடைபெற்றும் மின்சாரம் தன் ஆணையை உலகெங்கணும் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறது; இனியும் செலுத்துமென்பதிலும் தடையில்லை. பரந்த பாரதநாட்டில் மின்சாரம் பெரு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/239&oldid=1382041" இலிருந்து மீள்விக்கப்பட்டது