பக்கம்:தொழில் வளம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

243


சென்னை மின்சார இணைப்பிலுள்ள மிகப் பெரிய நீராவி மின் நிலையமாகும். இந்நிலையம் சென்னை நகரத்திற்கும் அதன் சுற்றுப்புற இடங்களுக்கும் மின்சாரம் பகிர்ந்தளிப்பதல்லாமல் கோடையிலே ஏற்படும் மின்சாரத் தட்டுப்பாட்டினையும் ஓரளவு தணிக்கிறது.

சிறப்பியல்புகள் : 1. மின்சார உற்பத்தி செய்யும் சாதனங்களின் சக்தியின் தொகை :— ‘A’ நிலையம் ; 38,500 கிலோ வாட் அல்லது 51,500 ஹார்ஸ் பவர்.

‘B’ நிலையம் ; 30,000 கிலோவாட் அல்லது 40,200 ஹார்ஸ் பவர். -

‘C’ நிலையம் : 30,000 கிலோவாட் அல்லது 40,200 ஹார்ஸ் பவர்.

2. நீராவி உற்பத்தி செய்யும் சாதனம்: (கொதி கலம்)

‘A’ நிலையம் :— மணிக்கு 60.000 பவுண்டு நீரைச் சதுர அங்குலத்துக்கு 200 பவுண்டு அழுத்தமும் 60F உஷ்ணநிலையும் உள்ள நீராவியாக மாற்றும் சக்தி பெற்ற நிலக்கரியால் இயங்கும் மூன்று நீராவி உற்பத்திச் சாதனங்களும் (கொதி கலங்களும்), மணிக்கு 40,000 பவுண்டு நீரைச் சதுர அங்குலத்துக்கு 200 பவுண்டு அழுத்தமும் 600F உஷ்ண நிலையும் உள்ள நீராவியாக மாற்றும் சக்தி பெற்ற, நிலக்கரியால் இயங்கும் மற்றொரு கொதி கலமும் உள்ளன.

‘B’ நிலையம் :— மணிக்கு 80,000 பவுண்டு நீரைச் சதுர அங்குலத்துக்கு 425 பவுண்டு அழுத்தமும் 775oF உஷ்ணமும் உள்ள நீராவியாக மாற்றும் 5 நீராவி உற்பத்திச் சாதனங்கள் (கொதி கலங்கள்) உள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/246&oldid=1400680" இலிருந்து மீள்விக்கப்பட்டது