பக்கம்:தொழில் வளம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

249



50,032 சதுர மைல் பரப்புள்ள சென்னை மாநிலத்தில் 19,911 கிராமங்களும் 295 நகரங்களும் உள்ளன. இதன் ஜனத்தொகை 336.4 லட்சம் ஆகும். இதில் 75 சதவிகிதம் அதாவது 252.3 லட்சம் மக்கள் கிராமங்களில் வசிப்பவர்களாவர்.

இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் சென்னைக்கும் கிராம மின்சார விஸ்தரிப்பு மிக மிக அவசியமாகும் என்பது தெளிவு. ஏனெனில் இதன் உதவியால் உணவு உற்பத்தி பெருகுவதோடு கிராம மக்களில் பலருக்கு வேலை வசதியும் கொடுக்கப்படுகிறது. இது, சுகமான இன்ப வாழ்விற்கான வசதிகளைத் தந்து சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறது.

9,000க்கு மேற்பட்ட. நகர கிராமங்கள் மின்சார வசதி பெற்றுவருகின்றன.

மிகுந்த அளவில் கிராமங்களுக்கு மின்சாரம் அளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு இப்போது வருடத்திற்கு 1,000 கிராமங்களுக்கும் 12,000 விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டு வருகிறது.

எட்டுக் கோடி ரூபாய் செலவில் புதிய விஸ்தரிப்பு உருவகம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த மாநிலத்தில் மொத்த மின்சார உபயோகத்தில் சுமார் 25 சதவீதம் விவசாய பம்பு செட்டுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. விளக்குகளுக்கும், விவசாய உபயோகத்திற்கும் போக, கிராமக் கைத்தொழில் நிலையங்களுக்கும் வேண்டிய மின்சார வசதிகள் தரப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/252&oldid=1382297" இலிருந்து மீள்விக்கப்பட்டது