பக்கம்:தொழில் வளம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

தொழில் வளம்


என்ற உரம் செய்வதற்கான ஒரு தொழிற்சாலையை அமைத்து வருகின்றனர். கோத்தாரி அண்டு சன்ஸ் தூத்துக்குடிக்குப் பக்கத்தில் அம்மோனியம் பாஸ்பேட் தயாரிப்பதற்கான ஒரு பெரும் தொழிற்சாலையை அமைக்க முன் வந்துள்ளனர். இவைகளெல்லாம் உருவாகும் பொழுது, நம் ராஜ்ய்த்திற்கு வேண்டிய நைட்ரஜன் உரம் போதிய அளவிற்கு உற்பத்தியாகும். பாஸ்பேட் உரமும் நம்முடைய ராஜ்யத்தில் 110,000 டன் அளவுக்கு இப்போது உற்பத்தியாகிறது. மேலும் 140,000 டன் சூபர் பாஸ்பேட் உற்பத்தி செய்வதற்காக மூன்று தொழிற்சாலைகள் சென்னை, கடலூர், கோயம்புத்துார் ஆகிய இடங்களில் அமைக்க லைசென்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய தொழிற் சாலைகளில் முழு உற்பத்தி ஏற்படும்பொழுது மொத்தம் 2. 5 லட்சம் டன் சூபர் பாஸ்பேட் உரம் உற்பத்தி செய்ய முடியும். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட முடிவிற்குள்ளாக 320,000 டன் பாஸ்பேட் உரம் நமக்கு வேண்டியிருக்குமென மதிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்னொரு தொழிற்சாலை ஏற்படுவதற்கான தேவை உள்ளது. வருடம் ஒன்றுக்கு 60,000'டன் சூபர் பாஸ்பேட் உற்பத்தி செய்வதற்குத் தஞ்சாவூரில் ஒரு தொழிற்சாலையை அமைக்க முயற்சி நடைபெற்று வருகின்றது. இதற்கும் அனுமதி கிடைக்குமென எதிர் பார்க்கிறோம்.

ரசாயனத் தொழில் வகைகளில் தாரங்கதாரா கெமிகல் வொர்க்ஸ் 30,000 டன் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைத்துத் தொழில் நடைபெறுவது அங்கத்தினர்களுக்குத் தெரியும். இதன் உற்பத்தி அளவை 60,000 டன்னுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/271&oldid=1382238" இலிருந்து மீள்விக்கப்பட்டது