பக்கம்:தொழில் வளம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

295


டாகும். இந்த உண்மையை அறிந்த சில உற்பத்தியாளர்கள் திறம்படச் செயலாற்றி அதிக இலாபம் அடைந்து வாணிபத்தையும் தொழில் வளத்தையும் பெருக்கி நாட்டுக்கு நலம் அளிக்கிறார்கள். தொழிலும் வாணிபமும் பொன் வாத்தினைப் போன்றவை. ஆத்திரப்படாமல் அமைதியாக இருந்து மெள்ள மெள்ளத் தத்தம் துறையில் முன்னேற்றமடைந்து வந்தால் வளர வளர அவை பெருஞ் செல்வம் பயக்கும் என்பது ஒருதலை. அதைவிடுத்துத் தொடங்கிய உடனே பெருவருவாயினைப்பெற வேண்டுமென எண்ணி நேரியமுறையில்லாது தொழிலையோ வாணிபத்தையோ செய்தால் அது பொன் முட்டையிடும் வாத்தை ஆத்திரத்தால் அறுத்து நிற்பது போன்று, இட்டதம் முதலை இழந்து நிற்க வேண்டியதுதான். சில தொழில்கள் பல ஆண்டுகள் கழித்தும் பயன் தரலாம். ஆனால் தரத் தொடங்கிவிட்டால் எல்லையற்ற வகையில் இடைவிடாது ஈந்து கொண்டே இருக்கும். இதை உணராத சில ஆத்திரக்காரர்கள் உடனே பயன் காணக் குறுக்கு வழியைக் கையாண்டு தம் வாணிபத்தைக் கெடுத்துக் கொள்வதோடு நாட்டின் நல்ல பெயரையும் நாசமாக்குகின்றனர்.

சில பொருள்கள் வெறும் விளம்பரத்தாலேயே மக்கள் மனதைக் கவர்தல் உண்டு. சிறப்பாகப் படக் காட்சிகள் பற்றிய விளம்பரத்தை இங்கே நினைத்துப் பார்க்கலாம். கண்ணைக்கவரும் வண்ணப் படங்களைப் பல கோணங்களில் அமைத்து அடுக்கடுக்காக அழகிய தமிழில் விளம்பரம் செய்யும் எத்தனையோ படங்களை நாமறிவோம். அவற்றின் விளம்பரங்களைக் கண்டே ஏமாறும் மக்களும் சிலர் உளர். எனினும் படங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/298&oldid=1381822" இலிருந்து மீள்விக்கப்பட்டது