பக்கம்:தொழில் வளம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

தொழில் வளம்


அத்தகைய பெரும் உற்பத்திச் சாலைகள் சில்லறை விற்பனையாளருக்குத் தகுந்த கழிவு தருவதுடன் நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த விலைக்குமேல் விற்கலாகாது என்ற கட்டுப்பாடும் செய்து விடுகின்றனர். எனவே பெரு நகரங்களில் இருந்து சாதாரண கிராமக் கடையில் உள்ளவர் வரை அந்தப்பெரும் தொழிற்சாலைப் பொருள்களை விற்று, தத்தமக்குரிய கழிவை இலாபமாகப்பெறுகிறார்கள். அப்படியே வாங்குபவர்கள் அந்த முத்திரையுடைய பொருள் எங்கே வாங்கினாலும் ஒன்றே எனவும் ஒரே விலை எனவும் கருதி வாங்கி மன நிறைவு பெறுகிறார்கள். எனவே வியாபாரத்தின் நாணயம் அனைத்துக்கும் உற்பத்திச் சாலைகளே அடிப்படைகளாக மாறுகின்றன.

ஒரு சிலருடைய முத்திரையிட்ட பொருள்கள் நன்றாக விற்பனையாகின்றதென்று காணும் சிலர் அந்த முத்திரையில் ஒரு சில மாற்றித் தமது முத்திரையாகக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். அப்போதுதான் நீதிமன்றங்களும் அரசாங்கமும் அவர்கள் இடையில் வந்து உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டிய நிலை உண்டாகின்றது. ஒரு சிலர் இத்தகைய முத்திரை உடைய தகரடப்பிக்கள் முதலியவற்றைக் காலியாக உபயோகித்தவர்களிடம் வாங்கி அவற்றுள் மட்டமான பொருள்களை நிரப்பி அறியா மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்படியே நல்ல முத்திரைகளைப்போன்று வேறு சிலர் அறியா வகையில் அச்சிட்டு அதே பொருள்களை மட்டரகமாக உற்பத்தி செய்து நாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். நூறு ரூபாய் கோட்டு முதலியவற்றை அச்சிட்டு அரசாங்கத்தையே ஏமாற்றும் இந்த நாளில் இவை மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/305&oldid=1382017" இலிருந்து மீள்விக்கப்பட்டது