பக்கம்:தொழில் வளம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

309



9. Style factor
10. Introducing colour
11. Using new meterials, finishes and construction
12. Improving the package

13. Modifying the price range.

மேலை நாடுகளில் ஒவ்வொரு உற்பத்தியாளரும் தம் உற்பத்திப் பொருள்கள் பயன்படும் இடங்களுக்கு நேராகச் சென்று அவை பயன்படும் நிலையினையும், முறையினையும் திறனையும் கண்டு, அவற்றைப் பயன்படுத்தும் மக்களிடம் அப்பொருள்களின் உபயோகத்தில் உள்ள குறைபாடுகளைக் கேட்டறிவார்கள். குறைபாடுகள் இருப்பின் அவற்றை எவ்வெவ்வாறு அடுத்து வரும் உற்பத்திகளில் நீக்க முடியும் என ஆராய்ந்து அவற்றைச் செம்மை செய்வர். அவை நன்கு இலங்குமாயின் அவை மேலும் சிறக்க வழி என்னஎன ஆராய்வர். பெரும் பொருள்கள் மட்டுமன்றிச்சாதாரண உணவுப்பொருள், 'சோப்பு' முதலிய உபயோகப் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் கூட இத்தகைய ஆராய்ச்சி செய்வர். இதனால் பயன்படுத்தும் மக்கள் பலர் அறிமுகமாவதோடு, அவர்களும் தொடர்ந்து இதே பொருளை உபயோகிக்க வழியையும் தேடிக் கொள்ளுகின்றனர். நம் நாட்டில் தற்போது சில உற்பத்தியாளர்கள் சில பெண்களை அமர்த்தி வீடு வீடாகச் சென்று தத்தம் பொருளை அறிமுகப் படுத்துகிறார்களேயன்றி மேலை நாடுகளைப் போன்று ஆராய்ந்து தொழிற்படுவது கிடையாது. அதனால் பல தொழில்கள் வளர்ச்சியடைய முடியாது கசிகின்றன. தையல் யந்திரம் தயாரிப்பவர் சிலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/312&oldid=1381977" இலிருந்து மீள்விக்கப்பட்டது