பக்கம்:தொழில் வளம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

33


தொழிற்சாலையும் பிரம்பூர் இரெயில் பெட்டித் தொழிற் சாலையும், பெங்களூர் விமானத்தொழிற்சாலையும் அன்று இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஊர்தொறும் கொல்லன் உலைக்களம் ஓயாது பல இருசுகளை உருவாக்கி மக்களுக்கு உதவிக்கொண்டே இருந்திருக்குமல்லவா. மற்றும் அன்று ஓடிய வண்டிகளுக்கு வேண்டிய அச்சாணி தொடங்கிப் பல்வேறு பொருள்களைச் செய்த உலைக்கூடங்களும் தொழிற்சாலைகளும் இருந்திருக்க வேண்டுமல்லவா! எனவே மனிதன் ஊர் அமைத்துப் பயிரிடத் தொடங்கிப் பாதை அமைத்துக் கொண்ட அந்த நாளில் அவன் திட்டமிடாமலேயே-எண்ணாமலேயே ஊர்தொறும் பல தொழிற்சாலைகளை அமைத்துக்கொண்டான் என்பது உறுதி.

உணவும் உடையும் உறையுளும் அவனது அவசியப் பொருள்களாகிவிட்டன. உணவில் தான் பயிரிட்ட பல்வேறு பொருள்களை நெருப்பிலிட்டுப் பதமாக்கி உணவாக்கி உண்ணும் திறம் பெற்றுவிட்ட மனிதன் உடையிலும் பல மாற்றங்களைக் காண முயன்றிருப்பானல்லவா! அந்த முயற்சிகளே அவனுக்குப் பட்டினிலாடையும் பஞ்சியிலுடையு மட்டுமன்றிக் கம்பளிப் போர்வைகளையும் அளித்திருக்க வேண்டும். குளிர் நிலத்தில் வாழ்ந்த மனிதன் ஆடுகளின் கம்பளப் போர்வையைக் கண்டு, தான் குளிரால் வருந்த அவை குளிரைச் சட்டை செய்யாமல் ‘சட்டை’ இட்டனபோன்று இருப்பதைக் கண்டு அவற்றின் மேற்பரப்பிலுள்ளவற்றைக் கொண்டு தனக்கும் கம்பளி உடையைத் தேடிக் கொண்டவனாக வேண்டும். மனிதன் வாழ்வில் பட்டும் பஞ்சும் இடம்பெற்ற காலம் எந்த நாளாக இருந்தாலும்-அக்காலம் இன்று நம்மால் அறியமுடியாத நிலையிலிருந்தாலும்- அக்காலம் மிகச் சிறந்தகாலமென்பதை யாரே-

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/36&oldid=1381395" இலிருந்து மீள்விக்கப்பட்டது