பக்கம்:தொழில் வளம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தொழில் வளம்



என்று காட்டுவர். வரம்பறியாத அளக்க முடியா அளவில்-அத்துணை அளவில் பண்டங்கள் இறங்கியும் ஏறியும் சென்றாலும் அவற்றை அளந்தே, அங்கங்கே இருந்த அலுவலர் கணக்கிட்டுத் தம் காட்டு முத்திரையாகிய புலி இலச்சினையை இட்டே வெளி அனுப்பினர் எனக் காண்கின்றாேம். இக்காலத்தில் சுங்கச் சாவடி (Custom House) போன்று அக்காலத்தும் துறைமுகப் பட்டினங்களில் சாவடிகள் இருந்து வெளி நாட்டு வாணிபத் துறையைத் திறம்பட வளர்த்துக் கர்த்தன. என் அறிகின்றாேம்.”

'புலிப்பொறித்துப் புறம் போக்கி னார்கள்'

(பட்டினப்:135)

எனக் காட்டுவர் உருத்திரங் கண்ணனார். புகார் நகரின் வாணிபப் பொருள்கள் பல. அவற்றுள் ஒரு சிலவற்றையே ஆசிரியர் வரிசைப்படுத்திக் காட்டுகின்றார் ; நாமும் காண்போம்:

'நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த் கருங்கறி முடையும்
வடமலை பிறந்த மண்யும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு'

(பட்டி, 185-193)

என அவர் அந்நகரின் வாணிப வளனை நன்கு காட்டுகின்றார். இந்த அடிகளால் தமிழ்நாடு பிற நாடுகளோடும் இந்தியநாட்டுப் பிற பகுதிகளோடும் கொண்ட வாணிபத் தொடர்பு பற்றி ஒருவாறு அறிந்துகொள்ள முடிகின்ற தன்றாே! இத்தகைய் வாணிப் வளனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/57&oldid=1381453" இலிருந்து மீள்விக்கப்பட்டது