பக்கம்:தொழில் வளம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு முதலமைச்சர்
உயர்திரு. மீ. பக்தவத்சலம் அவர்தம்
அணிந்துரை

நாட்டில் எல்லாவகை வளர்ச்சிகளுக்கும் அடிப்படையாக இருப்பது தொழில் வளர்ச்சி. தொழில் அபிவிருத்தியைக் கொண்டே ஒரு நாட்டின் முன்னேற்ற நிலையையும் செழிப்பையும் நிர்ணயிக்க முடியும்.

பாரதநாடு பழமையாக விவசாயத்தையே நம்பிவந்துள்ள நாடு. நமது வாழ்க்கையில் உணவுப் பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் இருந்த போதிலும், இன்றைய விஞ்ஞானயுகத்தில் முன்னேறிச் செல்ல விவசாயத்தை மட்டும் நம்பியிருந்தால் பயனில்லை. இதனால் நமது பொருளாதார அமைப்பை, விவசாய அடிப்படையிலிருந்து தொழிலியல் அடிப்படைக்கு மாற்ற, நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

நாடு திட்டமிட்ட பொருளாதார அபிவிருத்தியைத் தனது லட்சியமாகக் கொண்டுள்ளது. திட்டம் என்பது நமது வளர்ச்சியைக் காட்டும் ஒரு கண்ணாடியே, ஆகையினால், மக்களுக்குத் திட்டங்களைப் பற்றி விளக்கிச்சொல்லி அவர்களது ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் அவ்வப்போது திட்ட வெளியீடுகளை வெளியீட்டு வருகின்றது. இந்தப் பணியில் தனிப்பட்டவர்களும் ஈடுபடுவது வரவேற்கத் தக்கதாகும். நம்மைச் சுற்றி வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதைக் காணும் எழுத்தாளர்கள் அவற்றை ஒதுக்கிவிடாமல், மக்களின் உழைப்பையும் நம்பிக்கையையும் அனைவருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/8&oldid=1381913" இலிருந்து மீள்விக்கப்பட்டது