பக்கம்:தொழில் வளம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தொழில் வளம்


லமைச்சு 1955ல் ஓர் உற்பத்தித்திறன் மைய நிலையத்தைப் பம்பாயில் தொடங்கியது. தொழில் கல்விப் பயிற்சிகள், உயர் மேலாட்சிக் கருத்தரங்குகள் (Top Management Seminars), அதன் பயிற்சிகள், தொழிற் பொறியியலில் புதிய மறு பயிற்சிகள், மேலாட்சியினர் —தொழிலாளர் கூட்டுக் கல்விப் பயிற்சி முறைகள், சேமிப்பிடங்களின் புணரமைப்புப் பயிற்சிகள், சமூக அளவில் தொழில்களுக்கான செயல் திட்டங்கள் முதலியவை அடங்கிய பலசெயல் திட்டங்களை அது நிறைவேற்றி இருக்கிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொழில் மையங்களில் உற்பத்தித்திறன் உணர்வை எழுப்புதல் பெரும்பாலும் மைய நிலையம் செய்யும் வேலையைப் பொறுத்ததாகும். இவற்றின் மற்றொரு முக்கிய திட்டம் ‘TWI’ எனும் தொழில்துறைக்குள் பயிற்சி. இதில் ஒரு மேற்பார்வையாளருக்கு வேண்டிய திறமை, அறிவு முதலியவைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ‘TWI’ ன் பயிற்சி முறைகளில் பயிற்றுவித்தல்; தலைமை வகித்தல் (Leadership), முன்னேற்றச் செயல் முறைகள், வேலையில் பயிற்றுவித்தல், வேலை உறவு நிலைகள், வேலைச் செயல் முறைகள் முதலியன அடங்கி இருக்கின்றன.

மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் பதினாறு மேலாட்சி அமைப்புக்கள் (Management organisations) இதுவரை முக்கியத் தொழில் மையங்களில் தோன்றியுள்ளன. இவைகள் அகில இந்திய மேலாட்சிச் சங்கத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவைமட்டும் அன்றி அகில இந்தியத் தொழில் நுணுக்கக் கல்விக் குழு தொழில்முறைக் கல்வியையும், உயர் தொழில் நுணுக்கக் கல்வியையும் ஒருமைப்படுத்தவும். அவற்றை நன்கு வளர்க்கவும், அமைக்கவும், அவற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/99&oldid=1381610" இலிருந்து மீள்விக்கப்பட்டது