பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பௌத்த மரபில் இருந்து வந்தது. இவை மக்கட் சமூகத்தின் அனுபவங்கள். இச்சொற்களிலெல்லாம் அதிகாரம் இல்லை. இவை போக அதிகாரம் சார்ந்த சொற்களும் தமிழுக்குள் வந்துள்ளன.தாசில்தார், கிஸ்தி என்பன எழுத்து மரபு சார்ந்து, அதிகாரம் சார்ந்து அரசாங்கத்தின் மூலமாக வருகின்ற சொற்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். எனவே தூய தமிழ் என்று எதுவும் கிடையாது. மொழித் தூய்மை என்பது, எப்படி ஒருவனை அழுக்கான மனிதன் என்று புறந்தள்ளுகிறோமோ அப்படித்தான் தூய்மையற்ற மொழி என்று ஒரு மொழியைத் தள்ளுவதும்! மொழித் தூய்மை என்பது ஒலியிலே காட்ட வேண்டிய தூய்மையா? இலக்கண அமைப்பிலே காட்டப்பட வேண்டியதா அல்லது பிற மொழிச் சொற்களை ஏற்கிறபோது காட்ட வேண்டியதா? தூய்மைவாதம் ஓர் எல்லைக்கு மேலே பாசிசமாகத்தான் முடியும். அது இனத்தூய்மை வாதமாக இருந்தாலும் சரிதான். ஆகவே அந்தச் சொல்லை அப்படிச் சொல்லாமல் முடிந்த மட்டும், இயன்ற வரையிலும் தாய்மொழியில் சொல்வதே அறமாக இருக்கும். அதே சமயம் தாய்மொழியென்பது மாறாத தன்மை யுடையதல்ல என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. புதிய வரவுகளை உள்வாங்கிக் கொள்வதாலேயே மொழி வளர்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல் தொல்காப்பியரே இதை ஆதரிக்கிறார். உரிச் சொற்களை எடுத்துக்கொள்வோம். தொல்காப்பியர் சொன்ன மிகுதியையுணர்த்தும் உரிச் சொற்கள் செத்துப்போய் விட்டன. வழக்கிலே ஒரே ஒரு சொல் மட்டும் மிஞ்சி இருக்கிறதாம். சில இடங்களிலே 'இளம்பிஞ்சு' என நாம் சொல்வதைத் 'தவப்பிஞ்சு' என்று சொல்கிறார்களாம். அந்த 'தவ' மட்டும் சில இடங்களிலே இருக்கிறது. ஆனால் புதுமாதிரியான இதே போன்ற சொற்கள் வந்திருக்கின்றன. 'செம' என்று பிள்ளைகள் ஒரு வார்த்தையைச் சொல்கிறார்கள். இந்த 'செம' என்பது 'சுமை' என்பதின் மாற்று வடிவம். சுமை என்பது மிகுதியை உணர்த்துவது; அது உரிச்சொல் அல்ல. ஆனால் இங்கு அது உரிச்சொல்லாகி விட்டது. 'தூள்' என்றொரு சொல்; 'படம் தூளாக இருந்தது' என்கிறான்; நன்றாக இருந்தது என்பதல்ல, இதன் பொருள் 'ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது என்பதாகும் 'தூள்' நிகழ்காலத்திலே பிறந்திருக்கிற ஓர் உரிச் சொல். இவை போன்ற சொற்களை நமது மொழிக்குரியவையாக நாம் பாவிக்க வேண்டும்.சூப்பர்' இந்தச் சொல்லை ஆங்கிலச் சொல்லாகக் கணக்கிலெடுக்கக் கூடாது. இதை ஒலித்திரளாக முன்வைத்து இது உணர்த்தும் பொருளை எடுத்துக்கொண்டால், இது . 156 12 தொ. பரமசிவன்