பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மிகுதிப் பொருளை உணர்த்தும் ஓர் உரிச்சொல். அதைத்தான் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதனால் 'மொழி மாறும் தன்மையுடையது. மாறுவதனால்தான் அது உயிரோடு இருக்கின்றது' என்பதை நாம் மொழிப்பாடத்துக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வேற்று மொழிச்சொல்லைத் தமிழ்ப்படுத்துவதைப் பற்றிச் சொல்லுங்களேன். உதாரணமாக, பென்சிலைக் 'கரித்துண்டு' சாவியைத் 'திறவுகோல்' சாக்பீசை 'சுண்ணாம்புக்கட்டி' என ஏன் சொல்ல வேண்டும்? பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் குழந்தைக்குப் புரிகிறதா என்பதுதான் கேள்வி. 'திறவு' என்ற சொல் செயற்கையானது என்றாலும் குழந்தையால் புரிந்துகொள்ளமுடிகிறது. எப்படி யென்றால் 'கதவைத் திற' என்று வினைவடிவமாக நீங்கள் சொல்கிறபோதும் 'கோயில் நடை திறந்தாச்சா? என்று கேட்கும் போதும் 'திறத்தல்' என்கிற வினைவடிவத்தைக் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறீர்கள். எனவே 'திறப்பதற்குரியது' என்ற அளவிலே திறவு' என்ற பெயர்ச்சொல்லைக் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள். மேலும், கதவைத் திறக்க உதவுகிற அந்தச் சாவியினைக் குழந்தைகள் பார்த்திருப்பார்கள், பயன்படுத்தியிருக்கிறார்கள். எனவே, திறவு என்பதில் அவர்களுக்குச் சிக்கல் இல்லை. குழந்தைகளின் அனுபவ எல்லைக்கு உள்ளாக ஆங்கிலச் சொல்லிற்கு மாற்றாக ஒரு புதுச்சொல்லைக் கற்றுக் கொடுப்பதில் சிக்கல் இல்லை. சில சமயங்களில் புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்திப் புதுச் சொற்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும். காப்பிக்குக் 'குளம்பி' என்ற ஒரு சொல்லைக் கொடுக்கும்போது என்ன செய்ய வேண்டுமென்றால், 'குதிரையின் குளம்புபோல் காப்பிக்கொட்டை இருக்கிறது பார்' என்று காப்பிக்கொட்டையை எடுத்துக் குழந்தைக்குக் காட்ட வேண்டும். பொருள் பற்றிய அனுபவத்தைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, வெறும் ஒலிபற்றிய, சொல்பற்றிய அனுபவங்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. பொருள் பற்றிய அனுபவம் குழந்தைகளுக்கு வேண்டும். தற்காலத் தமிழைப் பொறுத்தவரை வரலாற்று அனுபவங்கள் முக்கியமானவையாக இருந்துள்ளன. அதாவது தற்காலத் தமிழின் தன்மையை, உட்கூறுகளை மாற்றியமைத்த நிகழ்ச்சிப் போக்குகள் யாவை? தற்காலத் தமிழைப் பொறுத்த வரை திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் முக்கியமானவை. காலங்காலமாகப் பேச்சுரிமை நேர்காணல்கள் 1572