பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலங்களின் இடையே வளைந்து வளைந்து செல்லும் மீன்கள் நிறைந்த ஸ்த்பரி, அஸ்ஸாபெட் என்ற இரண்டு ஓடை களும் இந்தக் கிராமத்தின் அருகில் ஒன்றுசேர்ந்து, ஆழ மானதும், மெல்ல நகர்வதுமான காங்க்கார்டு ஆருக மாறு கிறது. அமைதியான குட்டைகளும், சதுப்பு நிலங்களும், அகன்று விரிந்துள்ள பைன் மரக் காடுகளும், அகன்ற இலே களையுடைய மரங்களும் உள்ளன. மேற்கில் பின்னணியாய் நின்ற ஏகாந்தமான சிகரம், தோரோவை வாழ்நாள் முழுவ தும் வா என்று அழைப்பதுபோன்று இருந்தது. அமெரிக்கக் காடுகளிலும், புல்வெளிகளிலும் சிவப்பு இந்தியர்கள் மட் டுமே வாழ்ந்தனர் என்று கூறப்பெற்ற கதைகளைக் கேட்பதி லும், காங்க்கார்டு கிராமம் முழுவதும் அவர்களது தங்குமிட மாய் ஸ்கெடாக்விட் என்று பெயர் பெற்றிருந்தது என்பதைக் கேட்பதிலும் இளமையில் அவர் அதிக ஆர்வம் காட்டினர். சுயதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் கலையில், அவர் இப்பொழுதே தேர்ச்சி பெறத் துவங்கி விட் டார். இக்கலை பிற்காலத்தில், அண்டை அயலாரிலும், சிறப்புடையவராக அவரை வேறு பிரித்துக் காட்டியது. அறிவுத் துறையின் பிற பகுதிகளில் சிறப்படைவதைக் காட்டிலும், தம் கைகளின் திறமையைப்பற்றியே அவர் பெருமை கொண்டார். . . " . . . ; , . புதிய இடத்தை நாடி மேற்கு நோக்கிச் செல்பவர்களே அப்பொழுதும் காணமுடிந்தது எனினும், புதியன காண் பதில் ஏற்படும் ஆர்வம் ந்யூ இங்கிலாந்தில் பல காலத் துக்கு முன்பே மறைந்துவிட்டது. உள்ளக் கிளர்ச்சியும், உடல் வலிமையும் பெற்றிருத்தல், அதிகச் சாமான்கள் இல் லாமல் பயணஞ் செய்தல், திறந்த வெளிகளில் தங்கல், புது: வழிகளிற் செல்லல், இன்று தங்கிய இடத்தில் நாளேத் தங் காமல் புறப்படல் ஆகிய பண்புகள்தாம் புதிய இடங்களே. நாடுபவர்களின் தனிப் பண்புகளாகும். இப் பண்புகளே, பத் தொன்பதிாம் நூற்ருண்டின் முற்பகுதியில், ந்யூ இங்கிலாந் தில், நிறுவன அமைப்பில் நிலைபெற்றுள்ள சமுதாயங் களில் எதிர்பார்ப்பது பயனிலாச் செயலாகும். கடினமான உழைப்பு, சமயச் சார்பான தன்னடக்கம், சிக்கனம் ஆகிய பண்பாடுகளைக் கொண்டுதான் வாணிகத்தில் அல்லாமல், பண்பாட்டிலுங்கூட ந்யூ இங்கிலாந்து மிக உயர்ந்த நிலையை அடைந்தது. இரண்டு முக்கியமான பல்கலைக் கழகங்களே 6