பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 8 ‘வாழ்க்கையில் துயரம் ஏற்பட்டால்... ... சதுப்பு நிலத்திற்குச் செல். ஸ்கங்க் காபேஜின் வலிய ஈட்டி போன்ற இலைகளைக் காண். புதிய ஆண்டு பிறந்து விட்டமையின் தாம் இறந்துபட வேண்டுமே என் பதற்காக அவை மனம் மாழ்கி நிற்கின்றனவா ? -தோரோவின் நாட்குறிப்பு. தோரோ தம் காலத்தில் வாழ்ந்தவர்களைக் கேலி செய்யும் முறையில் ந்யூ இங்கிலாந்தில் வாழ்வதாகக் கூறிக் கொள்பவர்கள்?’ என்று கூறுவதுண்டு. அத்தகைய வர்கட்கு ஒரு செய்தியாக அமைந்தது வால்டன்’ என்ற நூல். அவ்வாறு விடுக்கப் பெற்ற செய்தியும் நல்ல விளக்க மாகவே இருந்தது. தொழில் வளர்ச்சி யடைந்த பத் தொன்பதாம் நூற்ருண்டில், வாழ்க்கை, மிகவும் சிக்கல் நிறைந்ததாய், அற்பத்தனமுடையதாய், தவம் செய்வது போன்றதாய் அமைந்திருந்தது. ‘என்னுடைய அண்டை யில் வாழ்பவர்கள், மேற்கொண்டிருக்கிற வேலைகளே ஒப் பிட்டுப் பார்க்கும்பொழுது, ஹெர்க்குலஸின் வேலைகள் கூடக் குறைந்தவையாகக் காணப்பட்டன. ஏனென்ருல், ஹெர்க்குலஸ் மேற்கொண்ட பணி பன்னிரண்டுதான் ; மேலும் அவற்றிற்கு ஒரு முடிவும் இருந்தது. என் அண்டையி லுள்ளவர்கள் எந்தப் பிசாசையும் பிடிக்கவோ கொல்லவோ இல்லை ; ஆனல் அவர்களுடைய வேலேகட்குமட்டும் ஒரு முடிவை நான் காணவில்லை என்று தோரோ கூறியுள் ளார். அவர் அண்டையிலுள்ளவர்கள் மேற்கொண்ட பணியில், எவ்வித இன்பமும் இல்லாமல், முடிவில்லாத உழைப்பும், மனக் கவலையும், அற்பத்தனமும், தேக்கமும் மட்டுமே நிறைந்திருந்தமையின், அவர்களு ைய நற்பண்பு கள் என்பவைகூட மாசுபடிந்தே இருந்தன. இவற்றி லிருந்து விடுதலே அடைய ஒரே வழி, பிடிவாதமாக இவற்றை எளிதாக்குவதுதான் என அவர் கூறிஞர். நல்ல உழைப்பாளியும், வறுமை நிறைந்தவருமான ஐரிஷ்காரராகிய, ஜான் ஃபீல்ட் என்ற அண்டை வீட்டா 96