பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தோரோ பின்வருமாறு எழுதியுள்ளார் : "என்னுடைய அனுபவத்தைக் கொண்டு அவருக்குப் புத்திமதி கூறினேன் , எனக்கு மிக அண்மை யில் குடி இருப்பவர் அவரே அவரைப் போலவே இப் பகுதிக்கு மீன்படிப்பதற்காக வந்தேன் ; பிறகு என் தேவைகளே, என் உழைப்பாலேயே பெற்றேன் என்றெல் லாம் கூறினேன். எளிமையான, ஆனல் சுத்தமான வீட்டில் குடி இருந்தேன் என்றும், அவருடைய வீட்டின் ஒரு வருட வாடகை எதுவோ, அந்தத் தொகையில் என் வீட்டையே கட்டி விட்டேன் என்றும், அவர் விரும்பினுல் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அத்தகைய ஒரு வீட்டையே கட்டிவிடலா மென்றும் அறிவுறுத்தினேன். காப்பி, டி, வெண்ணெய், பால், பச்சைப் புலால் ஆகிய எதனையும் நான் உண்பதில்லையாதலின், இவற்றிற்காக உழைத்ததில்லை என்றுங் கூறினேன். மேலும், கடினமாக உழைக்காமையின் அதிகமாக உண்ண வேண்டி இருக்க வில்லை என்றும், அதல்ை உணவிற்காக நான் செல விட்டது மிகச் சிறிய தொகையே என்றும் விளக்கினேன் ... ... என்ருலும், அமெரிக்காவிற்கு வந்ததே ஒர் இலாப மென்றும், இங்கே டீ, காப்பி என்பவற்ருேடு, அன்ருடம் புலால் உணவும் கிடைக்கிற தென்ருர் அவர். ஆளுல் இவை வேண்டாம் என்று விட்டுவிட்டுச் சுதந்தரமாக வாழ் வதற்கு இடம் அளிப்பதனுலேயே, அமெரிக்காவைப் போற்றுகிறேன்? என்றேன் நான். இந்நாட்டில்தான் அடிமை வியாபாரத்தையும் போரையும் வேண்டாம் என்று கூறமுடியும். இவ்வாறு கூறுவதற்கு அரசாங்கம் தடை ஒன் றும் செய்யவில்லை. இத்தகைய தேவை இல்லாத அலுவல் களில் இறங்குவதனுல் ஏற்படும் அணுவசியமான செலவு களும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படுவ క5ుడిు.• • வையத்தில் வாழ்வாங்கு வாழும் முழுத்தன்மை பெற்ற மனிதர்கட்காகத் தோரோ வின் செய்தி வழங்கப்படவில் ஆல; அதன் எதிராக, தம்முடைய திறமையைப் பயனற்ற வழி களில் செலவிட்டு, வளம் பெற முடியாதவர்கட்கே இச் செய்தி வழங்கப் பெற்றது. ஓயாத உழைப்பு என்னும் அபினை உண்டு, அவர்கள்தம் ஆன்மாவையே இழந்துவிட் டுச் சுற்றிலுமுள்ளவற்றில் எவ்வித நாட்டமுங் கொள்ளாமல் 7 97