பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வை ஒரு நம்பிக்கை இழந்த வெறுமையாகக் கரு தினர். அத்தகைய அற்பத்தனம் நிறைந்த வாழ்வை விட்டு, அவர் அப்பால் திரும்பி விட்டார். காங்க்கார்டு, மெஸ்சூஸிட்ஸ், அமெரிக்கா என்பவற்றை என் நினைவிலி ருந்து அகற்றி விட்டு, ஒவ்வொரு நாளிலும் அந்நாளோடு ஒன்றிய அறிவுடைய ஒருவனுக இருக்க விரும்புகிறேன். எனவே, வாழ்க்கையின் பிரச்சினகள் எளிதாக்கப் பெற்ற இந்த ஏகாந்தமான இடத்திற்கு வந்து விடுகிறேன்?? என்று கூறியுள்ளார். எளிமையால் தான் வாழ்வில் நிறை வையும், கூர்மையையும் தர முடியும். மக்களினுடைய பணப் பசி, அவருக்கு வியப்பை ஊட்டிற்று. வயல்களின் நடுவே அமர்ந்து கொண்டு, ஒருநாள் அவர் ஏதோ எழுதிக்கொண் டிருந்ததைப் பார்த்த ஐரிஷ்காரர் ஒருவர், அவர் தம்முடைய கூலியைத் தான் கணக்கிடுகிருர் என்று கருதிவிட்டார். முன் னேற்றவாதிகள் "இந்த நூற்ருண்டின் விதியை நிர்ணயிக் கும் நூற்ருண்டாகும் இது ' என்று கூறிக்கொள்ளும் பத்தொன்பதாம் நூற்ருண்டு, முன்னேற்றத்தை நோக்கி விரைவாக முன்னேறிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப் படாமல், தாம் வாழ்க்கையில் எதனை எதிர்பார்த்தாரோ அதனைப் பெற வேண்டித் தனிமையாக நின்றிருந்தார் தோரோ. இந்த தேசத்தின் முயற்சி முழுவதும் மேனுேக் கிச் செல்லவில்லை; மேற்கு நோக்கி ஒரிகான், காலிஃபோர் னியா, ஜப்பான்முதலிய பகுதிகளுக்குச் செல்வதைக் கண்டு நான் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை... ... இந்த முயற்சி யில் ஆக்கச் சிந்தனையோ, அன்றி ஒரு சிறந்த நல்லுணர்ச் சியோ இல்லாமையோடு யாரும் தம்முடைய நல்லுயிரைப் பலியிடுவதற்குரிய மதிப்பும் இதில் ஒன்றும் இல்லை... ...தம் முடைய குறிக்கோளே நோக்கி அவர்கள் செல்லட்டும் ; ஆளுல் அது என்னுடைய குறிக்கோள் அன்று’ என்று அவர் கூறியுள்ளார். - தோரோவின் இந்த விவாதத்தின் வலிமை ஓர் உண் மை நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டது. தம் கருத்துக் க2ள வெளியிடு முன்னர். அவற்றைச் சோதஆன செய்து பார்த்தார். அவருடைய வார்த்தைகள் அர்த்தமற்ற வெறுஞ் சொற்கள் அல்ல. தம்முடைய வாழ்க்கையிலேயே இலாபத் தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து, தாம் கண்ட புதிய முறையான எளிய வாழ்வை மக்களுக்கு எடுத்துரைத்தார். 98