பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதுகூடப் பூசாரிகளின் கருத்தை மட்டும் வெளியிட்டு விட்டு ஏசுநாதரின் கருத்துக்களே மறைத்தே இருக்கும்’ எனவும் அவர் எழுதியுள்ளார். தோரோ தம்முடைய அனுபவம் முதிர்ந்த நாட்களில், மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும், தாம் எவ்லண்ணம் வாழ வேண்டும், நேர்மையற்ற அரசாங்கத் திடம் நேர்மை யுள்ள மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பிரச்னைகளே ஆராயும் நிலையில், சமு தாய சீர்திருத்தவாதியாக இருந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கக் கூடும். ஆனால், இயற்கை வல்லுநராகிய தோரோ எப்பொழுதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தார். நீதி, ஒழுக்கம் பற்றிய அவருடைய எழுத்துக் களும், சொற்பொழிவுகளும், அவருடைய நேரத்தில் ஒரு சிறு பகுதியையே எடுத்துக் கொண்டன. அவருடைய பிற்கால நாட்குறிப்பைக் கண்டால், கூர்ந்து நோக்குவதி லும், அவற்றைக் குறிப்பதிலும் எவ்வளவு நேரத்தைச் செலவிட்டார் என்பதை அறிய முடியும். காங்க்கார்ட்டைச் சுற்றிச் சுற்றுலாச் செல்வது தொடர்ந்து நடைபெற்றது. அன்றியும் ஒரொரு சமயம் நீண்ட தூரம் சென்று மீண் டார்; 1853, 1857 ஆகிய ஆண்டுகளில் 'மான் காடுகட்கு சென்று மீண்டார் ; 1856 இல் வெர்மாண்ட்டில் ப்ரேட் டில் போர்ரோ வின் அருகிலுள்ள ஃபால் மலைகளில் தாவர ஆராய்ச்சி நடத்தினர் ; 1857 இல் கேப் காட் என்ற இடத்திற்கு மறுமுறை சென்று மீண்டார். 1858 இல் இரண்டு முறை மலே ஏறி மீண்டார் : இவற்றுள் ஒரு முறை ப்ளேக் என்பவருடன் மொனுட்னக் என்ற இடத் தில் இரு இரவுகளைக் கழித் தார். மற்ருெரு முறை எட்வின் ஹோர் என்பவருடன் ஒயிட் மலேகளே ஆராய்ந்து வந்தார். 1860 இல் எல்லரி சேனிங்குடன் மொளுட்னக் என்ற இடத்தில் ஐந்து இரவுன்ஃக் கழித்தார். \ தோரோவின் காலத்தில், விலங்கு இயல் நன்கு சிவளர்ச்சியடையாமையின், அடையாளம் காண்பதிலும் தொகுப்பதிலுமே கழிந்தது. வெளி இடங்களிற் சென்று மாதிரிப் பொருள்களைச் சேகரிப்பவர்கள் நிறைந்திருந் தனரே தவிர, விலங்குகளின் நடத்தையைக் கவனிக்கிற தற்கால முறை பழக்கத்திற்கு வரவில்லை. விஞ்ஞான 100.