பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படையில் இயற்கை வல்லுநராக இருந்த சிலரின் விருப்பத்திற்கேற்ப, தோரோவும் சில மாதிரி விலங்குகளைச் சேகரித்த ப்ோதிலும் அதில் அவர் மகிழ்ச்சி காணவில்லை. 1854 ஆகஸ்டில் ஒர் ஆமையைக் கொன்று மாதிரிப் பொரு எாகச் சேர்க்க நேர்ந்ததை ஒட்டி, அவ்வாறு செய்ததின் நியாயத்தை ஆய்ந்து கீழ்வருமாறு எழுதினர் விஞ்ஞா னத்திற்காக இப்பொழுது தான் ஒர் ஆமையைக் கொன் றேன். ஆனல் இந்தக் கொலேபற்றி நானே என்ன முன்னித்துக் கொள்ள முடியவில்லே. எவ்வளவுதான் இத்தகைய கொலேகள் விஞ்ஞானத்திற்குத் தேவைப் பட்டாலும், கவிஞனுடைய இக் கொலேயை நேர்படுத்திக் காண முடியவில்லை. மேலும் கூர்ந்து நோக்கும் என் னுடைய இயல்புக்கு இது இடையூறு செய்யும். எவ்வளவு தான் ஆய்ந்து பார்த்தாலும், இச் செயலுக்கு என் மனம் ஒப்பவில்லை. என்னுடைய நாட்களே இச் செயல் அழித்து விடுகின்றது. ஒரளவு சுய மரியாதையையும் இழந்து விட்டேன். ஒரு கொலேகாரனின் அனுபவத்தை ஒரளவு பெற்று விட்டேன்.” சில மீன்களையும், பாம்புகளேயும் கொல்லத் தம் மனத் தில் திடத்தை வரவழைத்துக் கொண்டாலும், வெப்ப ரத்தப் பிராணிகள் எதனையும் கொல்ல அவர் துணிய வில்ஜல; எந்தப் பறவையையும் அவர் கொன்றதே இல்லே. இறந்த ஒரு பறவையைக் கையில் வைத் திருப்பதைக் காட்டிலும், உயிருள்ள பறவையைத் தம் மனத்தில் உள்ள அன்பில் வைத்திருப்பதே சிறந்ததாகும் என, பாஸ்டனி லுள்ள ஒரு பறவை வல்லுநரிடம் கூறினர். ஆல்ை நாளாக நாளாகப் பறவைகளே அடையாளம் கண்டு கொள் வது மிகவும் கடினமாகி விட்டமையின் (அவரிடம் இருந்த தெல்லாம் சக்தி குறைந்த ஒரு தொலைநோக்காடிதான்) தாவர இயலிலேயே அவருடைய கருத்தைச் செலுத்தி, உள்ளுர்த் தாவரங்களேயே தம்முடைய சேகரத்தில் சேர்த்து வந்தார். இயற்கை வல்லுநர் என்ற பட்டத்தை ஆர்வு பெற்ருராயினும், விஞ்ஞானிகள் கூட்டத்தில் இருப் தற்கு எப்பொழுதுமே ஓரளவு கூச்சப்பட்டார். எவ்வளவுக் கெவ்வளவு ஒருவர் புற நிலையில் தம்மைப் பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட சில துறையில் தம் முழுக் கவனத் தையும் செலுத்துகின்ருரோ, அவ்வளவுக்கவ்வளவு 101