பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகத் துறையில் அவர் வறுமையடைந்து விடுகின்ருர் என அவர் நம்பினர். ஒரு மனிதன் எவ்வளவு விழிப் புடன் உள்ளான் என்பதுதான் முக்கியமே தவிர இயற்கை யைப் பட்டியல் செய்வதில் எவ்வளவு சாமர்த்தியமுடைய வன் என்பது முக்கியமன்று. வல்லுநர்களுடைய விஞ்ஞா னக் கூக்குரல்களைக் கேட்டு, தோரோ ஏமாற்றமடைந்தார். வாழ்கின்ற எந்தப் பொருளையும், இயல்பாகவும் எளிமை யாகவும் அனைவருக்கும் புரியும் மொழியில் விளக்கி விட லாம் என அவர் எழுதியுள்ளார். j இயற்கையை முழுமையாக அறிந்துகொள்ள விரும்பி ஞர் தோரோ. மனிதனைச் சுற்றியுள்ள பொருள்களின் இயல்பை அறிந்தால், மானிட வாழ்க்கையின் அடிப்படை யையும் அறிய முடியும் என்று அவர் நம்பினுர். இதனைச் செய்ய வேண்டுமாயின், இயற்கையிடம் நேரடியாகச் செல்ல வேண்டும்; இயற்கை கற்பிக்கத் தொடங்கு முன்னர், அதனிடம் ஒர் உறவு மனப்பான்மை இருத்தல் வேண்டும். விஞ்ஞானிகள் அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே சென்ருலும், வாழ்க்கையைப் பற்றி நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை; அதாவது மகிழ்ச்சியுடன் கூடிய முழு வாழ்வை எவ்வாறு வாழ்வது என்பது பற்றியும் 'இரண்டு துருவங்களிலும் விழிப்புடன் இருப்பது எவ்வாறு என்பது பற்றியும் அவர்கள் ஒன்றுங் கூற முடியவில்லை, "இருண்ட காடுகளில் வளர்ந்து, இலையை அல்லாமல் ஒரு பூவையும் பூக்காத செடிகளைப் போன்றவர்கள் விஞ்ஞானி கள்?’ என்று கூறுகிருர் அவர். அவருடன் வாழ்ந்தவர்கள் கனவுகூடக் காணுத அளவில், ஆழமானதும் நிறைவுடை யதுமான வாழ்வுக்கு, இயற்கை வழி காட்ட வேண்டும் எனத் தோரோ விரும்பினுர். வாழும் உயிர்களையும், அவற் றின் சுற்றுச் சூழலையையும் கண்டு, நேரடியாக அவற்றி லிருந்து உணர்வு முறையில அறிய விரும்பினரே தவிர, அவற்றை முதலில் அறிந்துகொண்டு மறைமுகமாக இகன அறியவிருப்பமில்லை. தாம் இருப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னர்ப் பின்வருமாறு எழுதினர் : ஒர் அழகிய கழுகு, தம் தலைக்கு மேல் பறந்து செல்வதைக் கண்டு வியக்கும் சிலர், அதனைத் தம் கைகளில் ஏந்த வேண்டும் என விரும்புகின்றனர். ஆனல் இவ்வளவு தூரத்தில் இருக்கும் 102