பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது தான் அதனைச் சிறந்த முறையில் காண முடியும் என்பதையும், வேறு வழிகளிற் காண முடியாது என்பதை யும் அவர்கள் அறிவதில்லை. முற்றத்தில் கூச்சலிடுவது தவிர, சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பருந்து, வேறு என்ன செய்யும்? முற்றத்தில் ஒரு பருந்தைப் பார்ப்பதனுல் நான் அறிஞளுகிவிட முடியாது. அதனுடைய சிறகின் நீளத்தை அறிய நான் விரும்பவில்லை.: - பறவைகளைக் கவனிப்பதற்கோ, அன்றிச் செடி கொடி கள் சேகரிப்பதற்கோ, எதற்காகப் புறப்பட்டாலும் இறுக்கி மூடிய கைகளுடன் நடந்தோ அன்றி வேகமாகப் படகை வலித்தோ தோரோ செல்வதுண்டு. அவருடைய, செயல் படும் ஒருமுகப்பட்ட மனப்பாங்கையே, இது உணர்த்தியது. ஒவ்வொரு முறை வெளிச் செல்லும்போதும், அவர் புத்தம் புதிய மனக் கிளர்ச்சியுடன் புறப்படுவதைக் கண்டால், இயற்கையும் அவரும் பல காலமாக ஒன்ருகவே சேர்ந்து பணி புரிகின்றனர் போலும் என்று தோன்றும். காங்க்கார் டில் உள்ள எல்ம் மர நிழலில் அமைந்த சாலே வழியே சென்று வயல்களுக்குள் அவர் மறைந்து போவதைக் கண்ட அக் கிராம மக்கள், மிகச் சாதாரண ஒரு மனிதராகவே அவரை நினைத்தனர். உண்மையைக் கூறுமிடத்துக் காடு கள், ஆறுகள், சதுப்பு நிலங்கள், புதர்கள், மலேப்பகுதிகள் ஆகியவை, பிறர் விளங்கிக் கொள்ள முடியாத முறையில் அவரிடம் தொடர்பு கொண்டிருந்தன. ஊரின் எல்லேக்கு அப்பாற்பட்டுச் சிவப்பு இந்தியரைப் போல வாழும் மக்க ளின் ஒரு சிலரை மட்டுமே அவர் அப் பகுதிகளில் சந்திப் பதுண்டு. சிவப்பு இந்தியர் ஒருவரையோ, அன்றி அவர்கள் போன்ற ஒருவரையோ அவர் சந்திப்பதில் மிகவும் விருப்பங் காட்டிஞர். காங்க்கார்டு கிராமக் குடியானவர் சிலரிடம் காணப்பட்ட சிவப்பிந்தியக் குறிகளே , இயல்புகளையும் அவர் குறித்து வைத்தார். ஆணுல் இவை அனைத்தையும் விட அவன் மிகுதியும் விரும்பிப் போற்றியது, என்ருே ஒரு நாள் அவர் சந்திக்கின்ற துய சிவப்பிந்தியனே யாகும். 'துய்மையான அந்தச் சிவப்பிந்தியன் பைன் மரங்களின் இடையேகூடத் தன் காட்டுப் பார்வையுடன் காணப்பட் டான், மெஸ்சூலிட்ஸில் காணப்பட்ட கடைசி இனத்தவர் 103