பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறுவியுள்ளது ந்யூ இங்கிலாந்து. ஹார்வார்டு , யேல் : என்ற இரண்டு பல்கலைக் கழகங்களின் மூலமாகவும். ந்யூ இங்கிலாந்து மக்கள், பொதுவாக அன்றைய ஐரோப்பிய, சிந்தனைகளையும், குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து வந்தனர். எனவே, அந்த நாளில் மிகவும் வளர்ச்சியடைந்திருந்த முற். போக்குக் கருத்துக்களே எளிதிற் பெறக்கூடிய இடத்தில் தான், காங்க்கார்டின் இரண்டாயிரம் மக்களும் வாழ்ந்தனர். சமயத்தைப் பொறுத்தமட்டில், சமுதாயத்திலுள்ள அறி வாளிகள் அனைவரும், முப்பொருள் கொள்கையை விட்டு, தெய்விக ஒருமையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி யடைந்திருந்தனர். ஆன்மிகத் துறையில், ஆழ்ந்த முறை யில் ஒரு குழப்பம் தோன்றிய நாளில், ஹென்றி வளர்ந்தார். மனித முயற்சிகள் சுதந்திரமற்றவை, மேலும் அவை புறச் சக்திகளால் கட்டுப்படுத்தப் பெறுகின்றன என்ற துயரத்தை உண்டாக்கும் கொள்கையை அப்பொழுது தோன்றிய உவகை போக்கடித்துவிட்டது. அதனுல் உரிமையின் ஒளிக்கதிர்கள் தோன்றலாயின. இதன் ஒருபக்க விளைவாகக் குறிக்கோள் வாதிகள், கனவு காண்பவர்கள், நீதிவாதிகள் ஆகியோர் நிரம்பத் தோன்றினர். தொடக்கத்திலிருந்தே, ஹென்றி, தம் வீட்டில் புரட்சி, சீர்திருத்தம் என்ற காற்றை உட்கொள்ளத் தொடங்கினர். இளமைப் பருவத்தில் ஹென்றி பிற கிராமப் பையன் களைப் போலவே குடும்ப உறவில் இன்பங் கண்டு வாழ்ந் தார். அவரது புரட்சி மனப்பான்மையையும், திறமையை யும் அப்போது யாரும் அறியவில்லை. எனினும் பிற குழந்தைகளிலிருந்து இவரைப் பிரித்து அறிவதற்குரிய ஒரே ஒரு சூழ்நிலை இருந்து வந்தது ; அவருடைய பெற் ருேர், திருமணத்திற்கு முன்னர்த் தாங்கள் இருந்த வசதி யான வாழ்க்கை நிலையை மறக்கவே இல்லை. ஜான் தோரோவும், தம் தந்தையாரின் வாணிக வளத்தை மறக்க வில்லே ; ஸிந்த்யா தோரோ தம் பெற்ருேர்களின் செல் வந்தரான உறவினர்களேயும், பட்டம் பதவி பெற்றவர்களே யம் மறக்கவில்லை. எனவே, தாங்கள் வறுமையில் வாடி குலும், தங்களுடைய குழந்தைகள், வெறும் கிராமப் பள்ளிப் படிப்புடன் நின்றுவிடக் கூடாது எனக் கருதினர் 7