பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் அவன் ஒருவன்....' பற்பல குழந்தைகள் கைகொட்டி நகைத்தாலும் அவற்ருல் கலவரப்படாமல், "அழிந்து போன தன் இனத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டு, தனியே வாழும் சிவப்பு இந்திய மன யாட்டி ஒருத்தியைப் பற்றித் தம் வருத்தத்தை அவர் வெளியிட்டுள்ளார். அவள் அம் மண்ணின் மிகச் சிறந்த வர்களுள் ஒருத்தியாய் வாழ்ந்து வருகிருள். மான் காடு களில் அவருடன் வந்தவர்களும், அவருக்கு வழி காட்டி யாய் அமைந்தவர்களுமாகிய சிவப்பு இந்தியர்களேப் பற்றி விவரமாய் எழுதுவதில் மகிழ்ச்சி கொண்டார். அவருடைய பிரயாணக் கட்டுரைகள் அனைத் தினுள்ளும், மான் காடு களிற் பிரயாணம் செய்தது பற்றியும், கடாதின் மலைப் பிர ய்ாணம் பற்றியும் எழுதப் பெற்றவையுமே மிகச் சிறந்தவை எனலாம். இனி, அம்புகள் மக்கிப்போன மணற் காட்டில் ’’ அவர் சுற்றி அலகையில்தான் சிவப்பு இந்தியர்களே நினைவு கூர்ந்தார் என்று கருத வேண்டியது இல்லை. மான் காடு களில் சிவப்பு இந்தியர்கள், அவர்கட்குச் சொந்தமான விக்வாம் கிராமத்தில் வாழ்கிருர்கள். அங்கு, அவர்கள் தம் படகுகளைச் செலுத்திக் கொண்டும், பழமையான இசைப் பாடல்களே இசைத்துக் கொண்டும், புராதன முறையி லேயே வேட்டையாடியும், மீன் பிடித்தும், பழைய மரபைச் சேர்ந்த இந்திய நாய்களால் தம் குடிசைகளைப் பாதுகாத்துக் கொண்டும் வாழுகின்றனர். இதுவரை யாரும் நுழையாத கன்னிக் காடுகளில் நுழைந்து வெகுதுரம் சென்று, கரிப்யூ மான்களும், கரடிகளும், ஓநாய்களும் உயிருடையனவும், வீழ்ந்தனவும், அழுகியனவுமான மரங்களில், மானிடன் வாசனை இல்லா இடங்களில் வாழ்வதைக் கண்டார். ஒரு பாசறையிலிருந்து மற்ருெரு பாசறைக்குப் பழைய ஆற்றுப் பாதை வழியே மாளாத காட்டு வழிகளிற் சென்று, ஸ்ப்ருஸ், செடார், ஹெம்லக், பர்ச் ஆகிய மரங்கள் நிறைந்த பகுதி மரம் வெட்டுபவர் தங்குமிடங்களில் தங்கியும், வேக மாகச் செல்லும் நீரில் படகு ஒட்டக் கற்றுக்கொண்டு நீர் வீழ்ச்சிகளைச் சுற்றி நீண்ட தூரம் சென்றும், நிலவொளியில் ஏரிகளில் பல மைல் தூரம் படகு செலுத்தியும், திறந்த வெளியில் விறகுகளைக் கொளுத்தி அவற்றினிடையே தங்கி ஒஸ்ப்ரேகளும், மொட்டைப் பருந்துகளும் பறப்பதைப் 104