பகலிற் கண்டும், ஓநாய்களும் ஆந்தைகளும் அலறுவதை இரவிற் கேட்டும் காலங் கழித்தார். அவரிடமிருந்த வேட் டை இயல்பு மீதுர்ந்தமையின் ட்ரெளட், ரோச் ஆகிய மீன்களைப் பிடித்தார். முன்னர் அவர் கண்டிராத அளவில், பெரியனவாக இருந்த இந்த மீன்கள் எவ்வளவு விரைவாக அவர் தூண்டிலில் இரை போட்டாரோ அவ்வளவு விரை வாக அதனை உண்டன. இதிற் கிடைத்த அனுபவத்தின் புதுமை, மீன்களின் அழகு, கற்பனேக் கெட்டாத இயற்கை அழகு ஆகியவை காரணமாக, அன்றிரவு செடார் மரக் கிளேயில் அவர் படுத்திருக்கும்பொழுது, இவை அனைத்தும் கனவா அன்றி நனவா என்று பன்முறையும் ஐயங் கொண் டார். இந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ள, என் நண்பர் கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே எழுந் தேன். பொழுது இன்னும் விடியவில்லே. நிலவொளியில் மேகக் கூட்டம் இல்லாமல் க்டான் (Ktaadn) விளங்கி யது. இரவின் அமைதியை ஓடைகளின் சலசலப்பு ஒசை ஒன்றே கலத்தது. கரையில் நின்றபடியே என் தூண்டிலே மறுபடியும் நீரில் வீசினேன். கனவோ, க்ற் பனயோ என்று ஐயப்பட்டது உண்மையாகிவிட்டிருந்தது. வளைவுக் கோடுகளையுடைய ட்ரெளட் மீன்களும், வெள்ளி போன்ற நிறமுடைய ரோச் மீன்களும் பறவை மீன்களைப் போல நிலவொளியில் தாண்டிக் குதித்து விளையாடின: என்று கூறியுள்ளார். -f - அவருடன் வந்திருந்தவர்கள் ஒருவரும் இதுவரை சென்று கண்டிராத பகுதியினுள் இப்பொழுது நுழைந்தனர். ஆற்றை விட்டு நீங்கி, மலேப் பகுதியை நோக்கி மேடு பள்ள மான பாதை வழிச் சென்றனர். மலே ஏறுவதில் அதிகப் பழக்கமுடையவராகலின் தோரோவே இக் குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்ருர். திசை காட்டும் கருவி மூலம் தம் இருப்பிடத்தை அறிந்துகொண்டு, காட்டினுள் நுழைந்து, பல மைல் தூரம் அக் கூட்டத்தை அன்ழத்துச் சென்ருர். அடர்ந்த ஒக் மரங்களும், பர்ச், ஸ்ப்ரூஸ் மரங் களும் நிறைந்த பகுதிகளில் நிற்காமல் சென்று, மா?லநேரத் தில் மலேயடிவாரத்தைச் சேர்ந்தார். மறுநாள் பிறர் யாரும் உடன் வராமல், தாம் மட்டும் பனி படர்ந்த சிகரத்தை அடைந்தார். நன்கு பதியாமல் ஆடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் பாறைகளின்மேல் நான் மட்டும் தனிமை 105
பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை