பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத் தியே கொட்டகை போடுகிருன். சூடான ரொட்டி யையோ அன்றி இனிப்புப் பண்டங்களையோ உண்ணுமல், அமெரிக்க மான் இறைச்சி, கரடியின் கொழுப்பு ஆகிய வற்றையே உண்கிருன். மில்லியானகெட் வழியே வழுக்கிச் சென்று என் கண்ணிலிருந்து மறைந்து விடுகிருன்..... சிவப்பு முகமுடைய அவனும் தன் விதியை எவ்வாருே கழிக் கிருன் என்று கூறியுள்ளார். - - எழுத்துக் கலைபற்றித் தோரோ நிரம்பக் கூறுகிருர். "என்னுடைய வாக்கியங்கள், துப்பாக்கி சுடுபவன் குறி பார்ப்பதுபோலக் கூர்மையாகவும். சாவதானமாகவும் அமைக்கப்படுகின்றன? என்று கூறியுள்ளார். ஒரு நல்ல வாக்கியத்தை அமைப்பதென்பது ஹெர்க்குலிஸின் முயற்சி போல அத்துணைக் கடினமானதாயினும், அதற்கு எடுத்துக் கொள்ளும் கஷ்டம் பயனுடையதாகும் எனக் கருதிர்ை. சுவரின் மேல் வளேயாமல் சாய்ந்து கொண்டு நின்ருலும் நிற்பவன் முகத்தில் எவ்விதத் துன்பக் குறியும் காணப்படா ததுபோல, நீங்கள் வாக்கியத்தை அமைக்க வேண்டும். ஒர் எழுத்தாளனுடைய சொற்கள் அவனுடைய நேரடி அனுபவத்திலிருந்து பிறக்கவில்லையாளுல் அ வ ன் காலத்தை வீணடிக்கிருன் என்பதே பொருள். சொற்களின் பின்னே உணர்ச்சி இல் ஆலயானுல் அச் சொற்கள் பயனற்றவை. நாமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றி எழுதுவது வீண். அந்த விஷயம் நம்முடைய மனத்தில் ஒரு கிளர்ச்சியை ஊட்ட வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வேண்டுமாயின் அதன் பின்னர் அன்பின் கூட்டு முயற்சி இருத்தல் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவருடைய அண்டை வீட்டில் வாழ்ந்த குடியானவராகிய ஜ்யார்ஜ் மினேட் என்பவருடைய, எதனையும் விவரித்துப் பேசும் வன்மையைப் பெரிதும் போற்றுவார் தோரோ. 'மினுேட் பயன்படுத்தும் மிக அழகிய ஆங்கிலச்சொற்கள். என் வாழ்க்கையில் நான் முன்னர்க் கேட் டிராதவை யாயினும், நிச்சயம் ஆங்கில அகராதியில் இடம் பெற்றி ருக்கும்... ... சாதாரண மனிதன் ஒருவன் வால்டன் குட்டை யைப் பற்றி என்னிடம் பேசில்ை, ஆழமற்றதும், கிளர்ச்சி யூட்டாததும், அ ழ கி ய வண்ணங்களே வெளி விடா ததுமான ஒரு குட்டையை நான் மனக் கண்ணில் காண் கிறேன். ஆணுல், அதே குட்டையைப் பற்றி மினேட் 107