பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசும்பொழுது பச்சை நிறமுடைய நீரில் குன்றுகளின் நிழலேக் கூடக் காண்கிறேன்; ஏனென்றல் அவர் தம் அனுபவத்திலிருந்து அதனைப் பேசுகிருர். அவர் சென்ற காட்டை வருணிக்கும்பொழுது காட்டில் கிடக்கும் சருகு களின் சலசலப்பைக்கூடக் கேட்க முடிகிறது எனக் கூறி யுள்ளார். ஒரு வாக்கியம், ஒருவன் ஒட்டுகின்ற ஏர்ச் சால் போல, நேரடியாகச் சென்று முடிய வேண்டும் என்று கூறும்பொழுது மினெட்டைப் போன்றவர்களே நினைவில் கொண்டிருப்பார் போலும். ஒரு வாக்கியம் கிளர்ச்சியூட்ட வேண்டுமானல், அது உணர்ச்சியுடன் எழுதப்பட வேண்டும். உடம்பும் பொறிகளும் ஒன்று சேர்ந்து மனத்துடன் உழைக்க வேண்டும். வெளிப்பாடு என்பது முழு மனிதனும் தொழிற்பட வேண்டியதொன்ருகும் ’’ என்ருர் அவர். வால்டன் என்ற நூலே எழுதுவதற்குப் பல்லாண்டுகள் முன்னரே தாம் எத்தகைய நடையை எழுத வேண்டும் எனத் தோரோ முடிவு செய்துவிட்டார் : "வாக்கியங்கள் சொற்கள் மூலம் அறிவிப்பதைக் காட்டிலும் அதிகமாகக் குறிப்பால் உணர்த்த வேண்டும். அவற்றில் ஒருவிதக் கற்பனை நிறைந்திருக்க வேண்டும். பழைய காட்சிகளைக் காண்பதுபோன்ற நினைவை உண்டாக்காமல், புதிய எண்ணங்களேத்துண்ட வேண்டும். ரோம் நாட்டில் இருந்த நீர் மதகுகளைப் போல வாக்கியங்கள் நிலைத் தவை யாய், பல்வேறு சிந்தனைகளைகளைத் தோற்றுவிப்பனவாய் இருத்தல் வேண்டும். இத்தகைய வாக்கியங்களே அமைப் பதே எழுத்துக் கலை எனப்படும். வாழ்க்கையின் பெரும் பகுதியையும், பல பக்கங்களையும் செலவிட்டு எழுதப் பெறுகின்ற எழுத்துக்கள், ஒரு பக்கத்தின் குறுக்கேயும், நெடுக்கேயும் பெரிய மரத் துண்டங்கள் போல் இருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தில், மற்ருெரு வாக்கியத்தின் விதை அமைந்திருத்தல் வேண்டும். பன்னிப் பன்னி ஒன்றையே அவை கூறக் கூடாது. அதன் எதிராக, அவை புதியதொரு ஆக்கப் பொருளாக அமைதல் வேண்டும். இவ்வாறு எழுத ஒருவன் தன் உடைமைகள் அனைத்தையும் விற்ருலுந் தகும்’ என்ருர் அவர். தோரோவைப் பொறுத் தவரை, நடையே மனிதனே உணர்த்தும், “எவ்வளவு சிறந்த முறையில் எழுதுகிறீர்களோ அவ்வளவு சிறந்தவர் களாக இருப்பீர்கள். ஒல்வொரு வாக்கியமும் நீண்ட சிந்த 108